வீடுகளுக்கு சோலார்.. மத்திய அரசின் 78000 மானியத்துடன் தமிழ்நாடு அரசு தரும் ஒரு லட்சம்.. முழு விவரம்

  • சென்னை: தமிழ்நாட்டில் வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் திட்டத்தில் பல்வேறு மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டப்படி பல நன்மைகள் உள்ளது. இந்த திட்டப்படி மத்திய அரசு ஒரு கிலோ வாட் அமைப்பதற்கு 30 ஆயிரம் மானியமும். 2 கிலோ வாட்டிற்கு 60 ஆயிரமும், 3 கிலோ வாட்டிற்கு 78 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது. இதனிடையே 2026-27 பட்ஜெட்டில் வீடுகளுக்கு ரூ.1 லட்சம் வரை கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு 2030-ஆம் ஆண்டிற்குள் தன் மொத்த மின் நுகர்வில் 50% மின்சாரத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாக பெறுவதற்கு இந்த திட்டம் பயனுள்ளதாகவே இருக்கும்.

    Advertisement

    மாநில அரசு மானியம் என்ன

    2026-27 பட்ஜெட்டில் வீடுகளுக்கு ரூ.1 லட்சம் வரை கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது

    Advertisement

    மத்திய அரசு மானியம் (PM Surya Ghar):

    1 kW அமைப்பு - ₹30,000

    2 kW அமைப்பு - ₹60,000

    3 kW மற்றும் அதற்கு மேல் - ₹78,000

    தேவைப்படும் மின்திறன்

    150 யூனிட்/மாதம் வரை: 1 kW (உற்பத்தி: ~120-130 யூனிட்)

    300 யூனிட்/மாதம் வரை: 2-3 kW

    300 யூனிட்டுகளுக்கு மேல்: 3 kW+ (3 kW அமைப்பு மாதம் ~360-400 யூனிட் உற்பத்தி செய்யும்)

    செலவு மற்றும் சேமிப்பு

    மானியத்திற்கு முன் 1 kW-க்கு ₹55,000 முதல் ₹85,000 வரை செலவாகும்.

    Advertisement

    மானியத்திற்குப் பின் தோராயச் செலவு:

    1 kW: ₹30,000 - ₹40,000

    2 kW: ₹60,000 - ₹80,000

    3 kW: ₹65,000 - ₹1,20,000

    முதலீடு திரும்பக் கிடைக்கும் காலம்

    3 முதல் 6 ஆண்டுகள். Solar panel-களுக்கு 25 ஆண்டுகள் உத்திரவாதம் உண்டு.

    அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான நன்மைகள்

    லிப்ட், தண்ணீர் பம்ப், பொது விளக்குகள் மற்றும் EV சார்ஜிங் மையங்களுக்குப் பயன்படுத்தலாம்.

    Group Net-Metering முறையில் தனித்தனி வீடுகளும் இதன் பயனைப் பெற முடியும்.

    கேரளா பாடம்

    பகலில் சூரிய மின்சாரம் அதிக அளவில் உற்பத்தியானாலும், இரவில் மக்கள் மின்சார வாரியச் மின்சாரத்தையே நம்பியுள்ளனர். பேட்டரி சேமிப்பு இல்லையென்றால் இரவில் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். உதாரணமாக கேரளாவில் கூரைச் சூரிய மின்சாரம் வெற்றி பெற்றிருந்தாலும், பகலில் அதிக உற்பத்தி மற்றும் இரவில் அதிக நுகர்வு காரணமாக மின்சாரக் கட்டமைப்பில் சிக்கல் ஏற்பட்டது.

    Advertisement

    சோலார் மின்சார சேமிப்பு பேட்டரி

    எனவே, தமிழ்நாட்டில் சோலார் பேனல்களுடன் பேட்டரி சேமிப்பு மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்) மற்றும் TN Green Energy Corporation எடுத்து வருகின்றன. குறிப்பாக கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பேட்டரி சேமிப்பு மையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு 2030-ஆம் ஆண்டிற்குள் தன் மொத்த மின் நுகர்வில் 50% மின்சாரத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது.. வீடுகளின் மேற்கூரை வழியே பெறப்படும் சோலார் மின்சாரம் இந்த இலக்கை அடைவதில் பெரும் பங்கு வகிக்கலாம் என தெரிகிறது. அதேநேரம் சூரிய ஒளி மின்சாரத்தை சேமிக்கும் சோலார் பேட்டரிகளையும் அரசு எல்லா மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும்.

    Advertisement

    இந்த திட்டத்தில் வீடுகளிலேயே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, உபரி மின்சாரம் அரசு மின்வலைப்பின்னலுக்கு அனுப்பப்படுவதால் ஒட்டுமொத்த மின் தேவையைச் சீரமைக்க முடியும். தற்போது நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்க மின்வாரியத்திற்கு மிக அதிக செலவாகிறது. அதேபோல் நிலக்கரியை வெளியில் இருந்து வாங்குவதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு பெரும் கடன் சுமை ஏற்படுகிறது. வீடுகளே மின்சாரத்தை உற்பத்தி செய்து அரசுக்குத் தரும்போது, அரசின் உற்பத்திச் செலவை பெருமளவு குறைக்கக முடியும்.

    வருங்காலத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் தொழில்துறை தேவைகள் அதிகரிக்கும் போது மின்சாரப் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு அதிகம்.. எனவே வீடுகள் சுயசார்புடன் மின்சாரத்தை உற்பத்தி செய்வது நாட்டின் மின்சாரப் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் ஆகும். அதற்காவே அரசு இந்த திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறது.

    English Summary

    Various subsidies have been announced for the residential solar power scheme in Tamil Nadu. This scheme offers numerous benefits. Under the program, the Central Government provides a subsidy of ₹30,000 for a 1-kilowatt system, ₹60,000 for 2 kilowatts, and ₹78,000 for 3 kilowatts. Additionally, an extra subsidy of up to ₹1 lakh is being provided for households under the 2026–27 budget.