சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக Belonging: A Journey of Love என்ற புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை வரும் 10 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்.
புத்தகம் தொடர்பான சில கருத்துகளை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு, ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றது தொடர்பாக கூறியுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமர் ஆவதை தான் விரும்பவில்லை என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சோனியா காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:- 'எனது கணவரை பிரதமராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது, நான் அதற்கு முற்றிலும் எதிராக இருந்தேன்..' என்று கூறியிருந்தார். மேலும் அவர், "புத்தகத்திற்கு பிறகு சிலர் என்னை பற்றிய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளக்கூடும். சிலருடைய கண்ணோட்டம் இன்னும் மோசமாகும். ஆனால், அதுதான் உண்மை. ஒரு புத்தகம் எழுதும்போதும், பொது வாழ்க்கையில் இருக்கும்போதும் இதுபோன்ற விஷயங்கள் நடப்பது இயல்புதான். இங்கு நீங்கள் சொல்வதைப் போல, நிச்சயமாகப் பெரும் பரபரப்பு ஏற்படும்" என்றார். சோனியா காந்தி தனது புத்தகத்தில் சிறு வயது முதல் நடந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இத்தாலி நாட்டை சேர்ந்த சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் திடீர் அரசியல் நுழைவு, தனது குடும்பத்தில் நடந்த அடுத்தடுத்த சோகங்கள், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற போதும், பிரதமர் பதவி வேண்டாம் என்று நிராகரித்தது உள்ளிட்ட விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். அரசியல் வட்டாரத்திலும் பல பரபரப்புகளை ஏற்படுத்தும் வகையில், தனது சுய சரிதையில் சோனியா காந்தி பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து இருப்பார் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. ராஜீவ் காந்தி பிரதமர் ஆக எதிர்ப்பு தெரிவித்த தகவல் இதற்கு முன்பே ஒரு நாவலில் பகிரப்பட்டு இருந்தது. ஜேவியர் மோரோ எழுதிய Red Sari என்ற வாழ்க்கை வரலாற்று நாவலில் இது குறித்த தகவல் இடம் பெற்று இருந்தது. அதில், ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்க முடிவு செய்ததை, சோனியா காந்தி மரண தண்டனையாகக் கருதியதாகச கூறப்பட்டு இருந்தது. ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்பதைத் தடுக்க முயன்ற சோனியா காந்தி, கண்ணீர் விட்டு அழுததாகவும், பதவியேற்பு உறுதிமொழியை ஏற்க வேண்டாம் என்று அவரிடம் கெஞ்சியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.பிரதமர் பதவி வேண்டாம் என்றேன்
கண்ணீர் விட்டு அழுததாக