கரூருக்கு போவதற்குள் கைது செய்ய நினைத்த விஜய்! பக்காவாக தப்பித்த செந்தில் பாலாஜி! விஜய் செம அப்செட்

  • சென்னை: ₹35 கோடி குதிரை பேர விவகாரம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்றது தற்போது முதல்வர் விஜய்க்கு சிக்கலாக முடிந்துள்ளது.

    Advertisement

    தவெக ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கிய விவகாரம், தவெக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    குறிப்பாக, இந்த தீர்ப்பின் பின்னணியில் தவெக தலைவர் முதல்வர் விஜய் கடும் அப்செட்டில் இருப்பதாக விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கரூரில் அரங்கேறவிருந்த கைது வியூகம்

    முதல்வர் விஜய் நாளை கரூர் மாவட்டத்திற்கு மிக முக்கியமான அரசியல் பயணமொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். அங்கு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தவெக தரப்பு தயாராகி வந்தது.

    விஜய் கரூர் மண்ணில் கால் வைப்பதற்கு முன்பாகவே, செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்பதே விஜய்யின் திட்டமாக இருந்தது.

    இந்த ₹35 கோடி லஞ்சப் புகாரில் அவரை அதிரடியாகக் கைது செய்ய திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முயன்றது மற்றும் தவெக அரசை கலைக்க சதித் திட்டம் தீட்டியது ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த கைது நடவடிக்கையை அரங்கேற்ற காய் நகர்த்தப்பட்டது.

    Advertisement

    ஆனால், அதற்குள்ளாக சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய முன்ஜாமீன் தீர்ப்பு, விஜய்யின் ஒட்டுமொத்த வியூகத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது. இதனால் திட்டமிட்டபடி கைதை அரங்கேற்ற முடியாமல் போனதால் விஜய் தரப்பு பெரும் ஏமாற்றமடைந்துள்ளது.

    நீதிமன்றத்தில் சறுக்கிய அரசு தரப்பு வாதங்கள்

    முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யான் மிகக் கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தார்.

    அதில், இது சாதாரண வழக்கல்ல, ஆட்சியை நிலைகுலைய வைக்க ஹவாலா பணத்தைப் பயன்படுத்தி 10 தவெக எம்எல்ஏக்களை தூக்க நடந்த சதி. இதில் முக்கிய குற்றவாளி சிங்கிப்பூருக்கு தப்பியோடிவிட்டான். எம்எல்ஏவுக்கு ₹35 கோடியும், இடைத்தரகருக்கு ₹5 கோடியும் பேசப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது," என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

    Advertisement

    இருப்பினும், செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறப்படும் நாளுக்கும், புகார் அளிக்கப்பட்டதற்கும் இடையே 2 நாட்கள் காலதாமதம் உள்ளது. மேலும், எவ்வித ஆடியோ பதிவும் இல்லை; வெறும் மொபைல் அழைப்பு விவரங்கள் மட்டுமே உள்ளன.

    கரூர் இடைத்தேர்தல் மற்றும் அரசியல் பழிவாங்கலுக்காகவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது," என வாதிட்டார். எஃப்ஐஆரில் செந்தில்பாலாஜியின் நேரடித் தொடர்பு குறித்துப் போதிய ஆரம்பகட்ட ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    சைலண்ட் மோடில் விஜய்

    வழக்கின் விசாரணை பெங்களூர் வரை நீண்டு, சென்னை கிண்டி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ECR) ஹோட்டல்களின் சிசிடிவி ஆதாரங்களை போலீசார் திரட்டி வரும் வேளையில், இந்த முன்ஜாமீன் உத்தரவு டிவிகே தரப்புக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    Advertisement

    செந்தில்பாலாஜியை கரூரில் வைத்து சட்டரீதியாக முடக்க நினைத்த பிளான் மிஸ்ஸானதால் விஜய் மிகவும் அப்செட்டில் இருக்கிறார். இருப்பினும், சிங்கிப்பூருக்கு தப்பிய முக்கிய குற்றவாளியை பிடிப்பதன் மூலமும், டிஜிட்டல் ஆதாரங்களை நீதிமன்றத்தில் வலுவாக சமர்ப்பிப்பதன் மூலமும் அடுத்தகட்ட செக் வைக்க விஜய் தரப்பு சட்டப் பிரிவு ஆலோசித்து வருகிறதாம்.

    English Summary

    Sources are saying that Vijay is deeply upset over Senthil Balaji anticipatory bail