அதிமுகவின் முக்கிய புள்ளியால் அமைச்சர் ஆனந்துக்கு குடைச்சல்? விஜய் மீது அதிருப்தி?

  • சென்னை: அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த ஒரு முக்கிய புள்ளியால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    தவெக எனும் கட்சியை விஜய் தொடங்கியதும், இந்த கட்சி சிவாஜி கணேசன் தொடங்கிய கட்சி போல் காணாமல் போக போகிறது. நடிகர்கள் தங்கள் செல்வாக்கை வைத்து அரசியல் வரக் கூடாது, மக்களோடு பணியாற்ற வேண்டும். எம்ஜிஆர், என்டிஆர் உள்ளிட்டோர் மக்களோடு மக்களாக பணியாற்றிய பிறகுதான் அரசியலுக்குள் வந்தார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

    Advertisement

    ஆனால் தவெக கட்சி தொடங்கப்பட்டு 3ஆவது ஆண்டிலேயே ஆட்சியை பிடித்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! பலரும் சொல்வது, இந்த வெற்றியை விஜய்யே எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பதுதான்.

    ஆம்! எல்லாருமே விஜய் மட்டும் அவர் போட்டியிடும் தொகுதியில் வெற்றி பெறுவார், மிஞ்சி போனால் அக்கட்சியின் பிரபலங்களான ஆதவ், புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன், நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்டோரில் ஓரிருவர் வெல்வார்கள் என கணிக்கப்பட்டது.

    ஆனால் நிலைமையே தலைகீழ்! விஜய் வென்ற 2 தொகுதிகள் இல்லாமல் மேற்கண்ட பிரபலங்கள் வென்ற தொகுதிகள் இல்லாமல் மற்ற இடங்களில் யாரென்றே தெரியாதவர்கள் எல்லாம் விஜய் என்ற ஒரு பெயருக்காக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    Advertisement

    இதற்கு காரணம் விஜய் மட்டுமில்லை, மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்ததுதான். விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்பதற்காகத்தான். இந்த தேர்தல் முடிவுகளால் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டு வந்த திமுக, அதிமுக உள்ளிட்டவை கடும் அதிர்ச்சி அடைந்தன.

    வாரிய தலைவர் பதவி

    இதையடுத்து தவெகவின் வாரிய தலைவர்கள் பதவிக்காக அதிமுக, திமுக கட்சிகளில் இருந்து பலரும் விலகி தவெகவில் இணைந்தனர். தேர்தலில் தோல்வி அடைந்த தவெக வேட்பாளர்கள் கரூர் மதியழகன், கு.ப.கிருஷ்ணனுக்கும், தேர்தலில் போட்டியிடாத கட்சிக்காக உழைத்த பெரம்பூரை மாவட்டச் செயலாளர் சிவாவுக்கும், லயோலா மணிக்கும் வாரிய தலைவர் பதவிகள் கொடுக்கப்பட்டன.

    Advertisement

    யார் இந்த சிங்கை ராமசந்திரன்?

    அந்த வகையில் 2016ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த சிங்கை ராமசந்திரனுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு பதவிகளை கொடுத்து அழகு பார்த்தார். இதையடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சிங்கை ராமசந்திரன் தோல்வியடைந்தார்.

    இந்த நிலையில் அதிமுக ஐடி விங்கில் முக்கிய பொறுப்பில் இருந்த அவர் கடந்த ஜூன் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் விஜய் முன்னிலையில் இணைந்தார்.

    மாஜிக்களுக்கே முடியவில்லை

    ஏற்கெனவே தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரே புஸ்ஸி ஆனந்த் முன்புதான் தவெகவில் இணைந்தார்கள். அது போல் அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோரும் புஸ்ஸி முன்பு இணைந்தனர்.

    Advertisement

    விஜய் முன்னிலையில் கட்சியில் இணைய சி.விஜயபாஸ்கர் எத்தனையோ தந்திரங்களை இயக்கியும் விஜய் மறுத்துவிட்டார். இதனால் புஸ்ஸி முன்பு இணைந்தார். ஆனால் சிங்கை ராமசந்திரன் மட்டும் விஜய் முன்பு இணைந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

    ஐஐஎம் பட்டதாரி

    சிங்கை ராமசந்திரன் அகமதாபாத் ஐஐஎம்மின் எம்பிஏ பட்டதாரி, இவர் ஐடி விங் செயல்பாடுகளை கற்றுக் கொள்ள வெளிநாடுகளுக்கெல்லாம் சென்றுள்ளாராம். கோவை மாவட்டத்தில் செல்வாக்குள்ள நபராம். இதுதான் விஜய்யை சந்திக்க வைத்தது என்கிறார்கள்.

    இந்த நிலையில் கட்சியில் சேர்ந்தவுடனேயே சிங்கை ராமசந்திரனுக்கு தமிழக அரசின் முக்கிய பதவியான Start UP அமைப்பின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    Advertisement

    முக்கிய பதவி

    தவெகவில் நீண்டகாலமாக உழைத்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு துளியும் உழைக்காத ஒருவருக்கு இவ்வளவு முக்கிய பதவியை கொடுத்தது தவெக நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்டார்ட் அப் சிஇஓ

    அது போல் அதிமுகவில் இருந்த போது, விஜய்யை சிங்கை ராமசந்திரன் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில் அவருக்கு எப்படி முக்கிய பதவி கொடுக்கலாம் என புஸ்ஸி ஆனந்திடம் தவெக நிர்வாகிகள் முறையிட்டனராம்.

    செல்லும் இடங்களில் எல்லாம் கட்சியில் கடுமையாக உழைத்தவர்களுக்கே பதவிகள், அதிகாரங்கள் என புஸ்ஸி ஆனந்த் உறுதியளித்து வரும் நிலையில் சிங்கை ராமசந்திரனுக்கு இந்த பதவியை தூக்கி கொடுத்ததால் விஜய் மீது ஆனந்தும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    English Summary

    Sources says that Bussy Anand and TVK activist are not happy with Vijay as he gave important post for Singai Ramachandran?