சிங்கை ராமசந்திரனுக்கு சிஇஓ பதவி? விஜய் அப்பாயிண்மென்ட் கிடைக்க அந்த மாஜிதான் காரணமா? சிவிபி அப்செட்

  • சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமசந்திரனுக்கு முதல்வர் விஜய்யின் அப்பாயிண்மென்ட் உடனடியாக கிடைத்ததற்கு காரணம் அந்த இருவராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. முன்னதாக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையலாம் என முடிவெடுத்திருந்த சி.விஜயபாஸ்கர், விஜய் முன்னிலையில் இணைய வாய்ப்பு கிடைக்காத நிலையில் சிங்கை ராமசந்திரனுக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்தது.

    Advertisement

    தமிழக அரசியலில் தினந்தோறும் ஒரு டிவிஸ்ட் நடந்து வருகிறது. அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகும் பலர் தவெகவில் இணைந்து வருகிறார்கள். அதிலும் அவர்கள் இணைவதற்கு முன்னர் எந்த தகவலும் மீடியாக்களும் கசியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

    Advertisement

    எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தவெகவில் இணையலாம் என மீடியாக்கள் ஒரு புறம் பிரேக் செய்ய காத்திருக்கும் நிலையில் திடீர் டிவிஸ்ட்டாக சிங்கை ராமசந்திரன் தவெகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிங்கை விசுவாச வீடியோ

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிங்கை ராமசந்திரன் அதிமுகவில் இணைந்த போது, அவரது காலில் விழுந்தார். அப்போது ஜெயலலிதா "நல்லா இருங்க, சிங்கை கோவிந்தராஜின் மகனா நீங்கள், அவர் மிகவும் விசுவாகமாக இருந்தவர். நீங்கள் அவரை போல் விசுவாசமாக இருப்பீர்கள்" என நம்புவதாக ஜெயலலிதா பேசியிருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றன.

    Advertisement

    நொறுக்கும் அதிமுக

    இவ்வாறு சிங்கை ராமசந்திரனின் வீடியோவை அதிமுகவினர் போட்டு தாக்கி வரும் நிலையில் இரு விஷயங்களை பார்க்க வேண்டும். அதாவது ஒரு கட்சியில் பெரிய அளவில் இருந்து பின்னர் மறு கட்சிக்கு செல்லும் போது யாராக இருந்தாலும் அந்த கட்சியின் தலைவர் முன்னிலையில் இணைய வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறார்கள்.

    அதிமுக எம்எல்ஏக்கள்

    அப்படித்தான் அதிமுக எம்எல்ஏக்களாக கடந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் விரும்பினர்.

    விஜய் அப்பாயிண்மென்ட்

    ஆனால் அவர்களுக்கு விஜய்யின் அப்பாயிண்ட்மென்ட் உடனடியாக கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் பொதுச் செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இவர்களும் கலந்து கொண்டு விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    Advertisement

    சி.விஜயபாஸ்கர்

    அது போல் அதிமுகவில் அதிருப்தியில் இருந்த சி.விஜயபாஸ்கர், விஜய்யை சந்தித்துதான் கட்சியில் இணைவேன் என அடம்பிடித்ததாகவும் அதற்கு விஜய், "கட்சியில் இணைவதென்றால் இணையச் சொல்லுங்கள், இல்லாவிட்டால் வேண்டாம்" என ஆனந்திடம் சொன்னதாக சொல்லப்படுகிறது.

    மாமல்லபுரத்தில் விழா

    இதையடுத்து வேறு வழியில்லாமல் சி.விஜயபாஸ்கர் மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட விழா நடத்தியிருந்தார். அதில் அவரை வரவேற்க யாரும் இல்லாத நிலையில் அவர், தவெகவினரை வரவேற்று ஆங்கர் போல் செயல்பட்டது அதிமுகவினரிடையே கேலிக்குள்ளானது.

    சிங்கைக்கு கிடைத்தது எப்படி

    நிலைமை இப்படியிருக்க, சிங்கை ராமசந்திரனுக்கு மட்டும் விஜய்யின் அப்பாயிண்ட்மென்ட் எப்படி கிடைத்தது, அவருக்கு எப்படி இத்தனை முக்கியவத்துவம், முன்னாள் அமைச்சர்களுக்கே இல்லாத மரியாதை ஐடி விங்கில் இருந்து வந்த சிங்கை ராமசந்திரனுக்கு எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    முக்கிய பதவி

    இத்துடன் சிங்கை ராமசந்திரனுக்கு Startup TN CEO பொறுப்பு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும் கட்சியில் தொழில்நுட்ப அணியில் அவருக்கு நல்ல பதவி கிடைக்கலாம் என்று தெரிகிறது.

    யார் இந்த சிங்கை ராமசந்திரன்

    சிங்கை ராமசந்திரன், பி.இ. படித்துவிட்டு அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்மில் எம்பிஏ படித்துள்ளார். 11 வயதில் தனது தந்தையை இழந்த சிங்கை ராமசந்திரன், நன்கு படித்து அதிமுகவில் பல நல்ல பொறுப்புகளை வகித்திருந்தார். அதிமுக பிளவடைந்த போது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருந்த நிலையில் இரு அணிகளும் ஒன்றான போது அதிமுக ஐடி விங் மாநில செயலாளராக பணியாற்றியிருந்தார்.

    Advertisement

    கோவை தொகுதி

    கடந்த 2024 ஆம் ஆண்டு கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு 3ஆவது இடத்தை பெற்றார். தற்போது 38 வயதே ஆகும் சிங்கை ராமசந்திரனுக்கு வரும் 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

    இவர்தான் காரணமா

    இவ்வாறு விஜய்யை சந்திக்கும் அளவுக்கு தவெகவுக்கு சிங்கை ராமசந்திரன் நெருக்கமானதற்கு காரணம் எஸ்.பி.வேலுமணி, விஜய்யின் தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி, அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

    எஸ்.பி.வேலுமணியும் சிங்கை ராமசந்திரனும் ஒரே மாவட்டத்துக்காரர்கள். சிங்கை ராமசந்திரனை தவெகவுக்கு அனுப்பி எஸ்பி வேலுமணி ஆழம் பார்க்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஜெகதீஷ்

    இவரது தொழில்நுட்ப அறிவு, திரைத்துறையினருடனான தொடர்புகளால் ஜெகதீஷுக்கும் நெருக்கமாகி அதுவே தற்போது விஜய்யை சந்திக்கும் அளவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தித் தந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

    அது போல் நிர்மல் குமார், அதிமுகவில் ஐடி விங்கின் இணை செயலாளராகவும் சமூகவலைதள பிரிவிலும் இருந்ததால் சிங்கை ராமசந்திரன், விஜய்யை சந்திக்க நிர்மலும் உதவியிருக்கலாம் என்கிறார்கள்.

    ஐடி விங் வளர்ச்சி

    சிங்கை ராமசந்திரன் ஐடி விங் செயல்பாடுகளை கற்றுத் தேர்ச்சி அடைய வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார். சிங்காநல்லூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்காக பல இடங்களில் இலவசமாக இ-சேவை மையங்களை தொடங்கியுள்ளார். கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றிக்கு இவரது ஐடி விங்கின் பங்களிப்பும் அதிகமாகும். எனவே இவரது திறமையை விஜய் நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்வார் என்றே தெரிகிறது.

    Topics: #tamil nadu

    English Summary

    Sources says that Singai G.Ramachandran will get Startup TN CEO post? and he was given much importance in TVK, What is the reason?