கட்சிகள் வேறு.. ஆனால் குறிக்கோள் ஒன்று.. 5 தென் மாநிலங்களிலும் கலக்கும் மகளிருக்கு இலவச பஸ் பயணம்!

  • சென்னை: தென்னிந்தியாவை நாம் பார்த்தால் அரசியல் ரீதியாகப் பல கட்சிகள் ஆட்சியில் இருப்பது தெரியலாம். ஆனால், அரசியல் வேறுபாடுகளை தாண்டி 5 மாநிலங்களிலும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் இருக்கிறது. அரசியல் கட்சிகள் மாறினாலும் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு விஷயத்தில் மட்டும் தென் மாநிலங்கள் ஒரே நேர்கோட்டில் கைகோர்த்துள்ளன.

    Advertisement

    இந்தியாவை பொறுத்தவரை பெண் உரிமை, சமூக நீதி உள்ளிட்டவற்றில் வட மாநிலங்களை காட்டிலும் தென் மாநிலங்கள் சிறந்து விளங்கி வருகிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தென் மாநிலங்கள் தான் இதில் சிறப்பாக உள்ளன. ஐந்து தென் மாநிலங்களில் மூன்று வெவ்வேறு கட்சிகள், வெவ்வேறு சித்தாந்தங்களுடன் ஆட்சி நடத்தினாலும், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் மட்டும் ஒரே நேர்கோட்டில் கைகோர்த்துள்ளன.

    Advertisement

    வீட்டு வாசலைத் தாண்டுவதற்கே பெண்கள் யோசித்த காலம் உள்ளது. இப்போது இலவசப் பேருந்துப் பயணங்கள் ஒரு மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.. நுகர்வோர் சந்தை, உள்ளூர் பொருளாதாரம், பெண்களின் வேலைவாய்ப்பு என அனைத்திலும் இந்தத் திட்டங்கள் சைலெண்டாக புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.

    தமிழ்நாடு - 'விடியல் பயணம்' (2021)

    2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக அரசு கொண்டு வந்த 'விடியல் பயணம்' திட்டம், அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்வில் ஒரு மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் தினசரி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க இது உதவியது. மேலும், பெண்களால் எளிதாக எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும் என்ற சூழலையும் இது உருவாக்கியது.

    Advertisement

    டெல்லிக்கு பிறகு இந்தியாவில் பெண்கள் இலவச பயணம் என்பதை முதலில் அமல்படுத்திய மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகத்தில் இப்போது ஆட்சி மாற்றம் ஏறப்பட்டுள்ளது. விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை அமைத்துள்ள போதிலும், இப்போதும் இங்கு இலவச பயணம் தொடரவே செய்கிறது.

    கர்நாடகா - 'சக்தி' திட்டம் (ஜூன் 2023)

    அடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்றதும் அறிமுகப்படுத்திய 'சக்தி' (Shakti) திட்டம்.. சொகுசுப் பேருந்துகள் தவிர்த்த மற்ற சாதாரண அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற இந்த அறிவிப்பு மிக பெரிய வரவேற்பை கொடுத்தது. பட்ஜெட் கவலைகளைத் தூக்கியெறிந்துவிட்டுப் பெண்கள் மைசூர், ஹம்பி, குடகு போன்ற வரலாற்று மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் சுதந்திரமாகச் சென்று வரப் பெரும் 'சக்தி' கொடுத்துள்ளது.

    Advertisement

    தெலங்கானா - 'மகாலட்சுமி' திட்டம் (டிசம்பர் 2023)

    கர்நாடகா வெற்றி கொடுத்த தெம்போடு தெலுங்கானாவிலும் இதை ஒரு வாக்குறுகியாகவே காங்கிரஸ் முன்வைத்தது. அதன்படி தெலங்கானாவில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், 'மகாலட்சுமி' திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், பெண்களோடு சேர்த்து திருநங்கைகளும் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவித்தது.. ஆதார் கார்டில் தெலுங்கானா முகவரி இருந்தால் போதும்.. பெண்கள், திருநங்கைகள் இலவசமாக பயணிக்கலாம்.

    ஆந்திரப் பிரதேசம் - 'ஸ்திரீ சக்தி' திட்டம் (ஆகஸ்ட் 2025)

    ஆந்திராவில் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் சந்திரபாபு தலைமையிலான அரசு 'ஸ்திரீ சக்தி' என்ற பெயரில் இலவசப் பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பிற மாநிலங்களைப் போல இல்லாமல்.. ஆந்திராவிலும் தாங்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஐடி (ID Proof for Residence) நடத்துநரிடம் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திர பெண்களுக்கு இதன் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது ஆந்திர அரசு!

    Advertisement

    கேரளா 'இந்திரா கேரண்டி' (ஜூன் 2026)

    இந்த பட்டியலில் அண்மையில் லேட்டஸ்ட்டாக இணைந்து ஒட்டுமொத்த தென்னகத்தையும் 'இலவச பஸ்' வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது அண்டை மாநிலமான கேரளா. அங்குப் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வி.டி.சதீசன் தலைமையிலான புதிய அரசு, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 'இந்திரா கேரண்டி' திட்டத்தின் கீழ் வரும் ஜூன் 15 முதல் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.

    தென் மாநிலங்கள்

    அரசியல் மேடைகளில் கட்சிகள் கொள்கை ரீதியாக மாறி மாறி மோதிக்கொண்டாலும், பெண்களின் சுதந்திரத்திற்கான கதவுகளைத் திறந்துவிடுவதில் தென்னக மாநிலங்கள் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்கின்றன. 'இலவசங்கள் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும்' என்ற கார்ப்பரேட் வாதங்களுக்கு மத்தியில், இந்த இலவசப் பேருந்துப் பயணங்கள் பெண்களின் சுயசேமிப்பை உயர்த்தி, அவர்களை வீட்டைத் தாண்டி வெளியே வரவைத்துள்ளது.

    Advertisement

    இந்த ஐந்து மாநிலங்கள், மூன்று வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சியி்ல உள்ளன. ஆனால் பெண்களின் முன்னேற்றம் என்று வரும்போது தென்னகம் எப்போதும் அனைத்து மாநிலங்களும் நேர்கோட்டிலேயே பயணிக்கிறது.

    English Summary

    Explore the free government bus travel schemes for women across five South Indian states(தென்னிந்திய மாநிலங்களில் மகளிருக்கு இலவச பஸ் பயணம்): South India Free Bus Schemes latest news in tamil.