சென்னை: ஒருவழியாக சென்னை புறநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறி உள்ளது. தெற்கு ரயில்வே, கூடுவாஞ்சேரிக்கும் செங்கல்பட்டுக்கும் இடையே சுமார் 21.5 கி.மீ நீளமுள்ள 4வது வழித்தடத்தை அமைப்பதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இது சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தாம்பரம்-செங்கல்பட்டு 4வது வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். இந்த டெண்டர் நேற்று வெளியாகி உள்ளது.
சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியை தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கிறது. தாம்பரம் செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணியில் முதல் ஸ்டெப்பை எடுத்து வைத்துள்ளது. அதன்படி, கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய 4-வது அகல ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியைத் தெற்கு ரயில்வே நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான வழித்தடத்தில் நெரிசலைக் குறைக்கவும், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரை (39.998 கி.மீ முதல் 61.494 கி.மீ வரை) 21.5 கிமீ தூரத்திற்கு புதிய 4-வது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த டெண்டரில் கோரப்பட்டுள்ள பணிகளின் விவரம்.. புதிய ரயில் பாதை அமைத்தல், நவீன சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் , மின்மயமாக்கல் (2x25 KV OHE Electrification) மற்றும் பயன்பாட்டுப் பாதைகளை மாற்றி அமைத்தல் ஆகியவற்றை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் முடித்து தர வேண்டும். இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் ₹273.25 கோடி ஆகும். பணி முடிக்கும் காலம் என்பது ஒப்பந்தம் பெறப்பட்ட நாளிலிருந்து 730 நாட்களுக்குள் (2 ஆண்டுகள்) இப்பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. தாம்பரம் செங்கல்பட்டுஇடையே அமைக்கப்பட உள்ள நான்காவது பாதை திட்டத்தில் முதற்கட்டமாக செங்கல்பட்டு மற்றும் கூடுவாஞ்சேரி இடையே நான்காவது பாதை அமைக்க உடனே டெண்டர் கோருவதற்கு காரணம்.. இங்கு ஏற்கனவே நிலம் இருக்கிறது. பெரிதாக எந்த சிக்கலும் இல்லை. 3வது பாதை அமைக்கும் போதே, நான்காவது பாதைக்கான பிளானுடன் தான் தெற்கு ரயில்வே களம் இறங்கியது. அதுமட்டுமல்ல, கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு இடையே நெரிசல்கள் எதுவும் இல்லை. ரயில் பாதைகளை ஒட்டி நிலங்களை கையகப்படுத்த வேண்டிய பெரிய சிக்கல்களும் இல்லை. எனவே தான் டெண்டர் இந்த பக்கத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தாக கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் இடையே நான்காவது பாதைக்கு தனியாக டெண்டர் வெளியிடப்படும். இதில் தான் நிலத்தை கையகப்படுத்த வேண்டியதிருக்கும். பிளாட்பார்ம்களை மாற்றி அமைக்க வேண்டியதிருக்கும். சில இடங்களில் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலேயே மெட்ரோ பாதை அமைக்க வேண்டியதிருக்கும் இந்த நான்காவது பாதை என்பது, எக்ஸ்பிரஸ் ரயில்கள், வந்தே பாரத் போன்ற அதிவிரைவு ரயில்கள் 130 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக பாதையாக வடிவமைக்கப்பட உள்ளது. இந்த பாதை அமைக்கப்பட்ட பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இதில் மாறும். இதன் மூலம் தாம்பரம் வரை வரும் ரயில்கள் அப்படியே செங்கல்பட்டு வரை இனி இயக்க முடியும். இதன் மூலம் புறநகர் ரயில் பயணிகள் அதிக ரயில் சேவைகளை பெறுவார்கள். அதேபோல் காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்களில் அடிக்கடி விரைவு ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. எனவே நான்காவது பாதை அமைக்கப்பட்டால், ரயில்கள் நடுவழியில் நிற்க வேண்டியது இருக்காது. எனவே தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் மற்றும் செல்லும் விரைவு ரயில்கள் தாமதமின்றி தடையின்றி செல்லும். புறநகர் ரயில்களுமே நடுவழியில் நிற்காது .பூந்தமல்லி மெட்ரோ.. வடபழனி மெட்ரோவின் ஒரு நுழைவு வாயில் திறப்பு விழாவுக்கு இன்னும் ரெடியாகவில்லை
தமிழ்நாட்டின் பொருளாதார செயல்பாடு சரியில்லையா? சரியும் ஜிஎஸ்டி வசூல்.. நிதித்துறை செயலாளர் விளக்கம்