சென்னை துரைப்பாக்கத்தில் சிக்கிய சௌகார் ஜானகியின் மகளை மீட்ட தீயணைப்பு துறை! நடந்தது என்ன?

  • சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் சிக்கிய பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் மகள் யாக்னபிரபாவை (76) தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து மீட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சவுகார் ஜானகியின் மகன் யாக்னபிரபா வசித்து வருகிறார். இவரது பிள்ளைகள் அமெரிக்காவில் உள்ள நிலையில் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள அந்த வீட்டில் யாக்ன பிரபா தனியாக வசித்து வருகிறார்.

    Advertisement

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாக்ன பிரபாவிற்கு காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது. காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் அவரால் நடக்க முடியாது. இதனால் அவர் வீல் சேரை பயன்படுத்தியிருந்தாராம்.

    இந்த நிலையில் நேற்று காலை கழிவறைக்குச் செல்லும் போது வீல்சேரில் இருந்து தவறி விழுந்துவிட்டாராம். கீழே விழுந்த யாக்னபிரபாவால் மீண்டும் வீல் சேரில் அமர முடியவில்லை. பூட்டப்பட்ட வீட்டின் கதவையும் திறக்க முடியவில்லையாம்.

    சௌகார் ஜானகி கேட்டது ஒரே ஒரு சான்ஸ்.. எம்ஜிஆர் சொன்ன வார்த்தை.. அடுத்த நிமிடமே நடந்த அதிசயம்
    Advertisement

    இந்த சூழலில் அருகே இருந்த செல்போன் மூலம் தனது உறவினரை தொடர்பு கொண்டு தான் கீழே விழுந்துவிட்டதை தெரிவித்துள்ளார். பிறகு அவரது உறவினர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு உதவியை நாடினார்.

    இதையடுத்து துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சிக்கியிருந்த மூதாட்டி யாக்ன பிரபாவை மீட்டனர்.

    அவரது குடும்ப மருத்துவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. நடக்க முடியாமல் மூதாட்டி வீட்டிற்குள் பூட்டப்பட்டுள்ள கதவின் தாழ்ப்பாளை திறக்க முடியாமல் கஷ்டப்பட்ட நிலையில் அவரை தீயணைப்பு துறையினர் எப்படியோ மீட்டுவிட்டனர்.

    Advertisement
    Vairamuthu: பூ உடம்பு மறையலாம்; புகழ் உடம்பு மறையாது! சௌகார் ஜானகி மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

    இவரது மகள் நடிகை வைஷ்ணவி. இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அண்ணாமலை, நாட்டாமை, வா அருகில் வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு முறை சவுகார் ஜானகி, மகள் யாக்ன பிரபா, அவரது மகள் வைஷ்ணவி, அவரது மகள் ஆகியோரின் புகைப்படம் வெளியாகி 4 தலைமுறை என தலைப்பிடப்பட்டிருந்தது.

    பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளநில் 400 படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழக மாநில திரைப்பட விருது, கலைமாமணி விருது உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி தனது 94 வயதில் சவுகார் ஜானகி காலமானார். சௌகார் என்ற படத்தில் நடித்ததால் அவருக்கு அந்த பெயரே நிலைத்துவிட்டது.

    English Summary

    Sowcar Janaki's daughter rescued from Duraipakkam house as she was fell down from Wheel chair, couldn't wake up.