தாய்மாமன் சீர் விஜய் தந்துடுவாரு! அத்தை சீர், பாட்டி சீர் யார் கொடுப்பாங்க? சவுமியா அன்புமணி கேள்வி

  • சென்னை: தாய்மாமன் சீரை முதல்வர் விஜய் செய்துடுவாரு, ஆனால் அத்தை சீர், பாட்டி சீரை யார் செய்வது? அதற்கு விவசாயிகளுக்கு போதிய வருமானத்தை ஏற்படுத்தித் தர வேண்டும், அவர்களது பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி பேசியிருந்தார்.

    Advertisement

    பொதுவாக அரசியல்வாதிகள் சபை நாகரீகம், கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும், விமர்சனத்தையும் நாகரீகமாக வைக்க வேண்டும் என சொல்வதுண்டு. அந்த வகையில் பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி சட்டசபையில் யார் மீதும் எந்த விதமான விமர்சனங்களையும் முன் வைக்காமல் மக்களுக்கு தேவையானதை பேசக் கூடியவர்.

    Advertisement

    சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதாலும் அவர் பேசுவதை பெரும்பாலான உறுப்பினர்கள் கேட்பார்கள். அந்த வகையில் இன்றைய தினம் சவுமியா அன்புமணி பேசுகையில், சமூக நீதி கணக்கெடுப்பு என்று ஒரு வரலாற்று சிறப்பான தீர்மானத்தை தவெக வெளியிட்டார்கள். ணஆனால் அதற்கு பட்ஜெட் ஒதுக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    அது போல் கூட்டுறவு கடன் தள்ளுபடியை எதிர்பார்க்கிறோம். டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இருக்கும் நிலையில் வேளாண் துறைக்கு இந்த பட்ஜெட்டில் வெறும் 16 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    வீடுகளில் பெண்களும் பட்ஜெட் போடுகிறோம். வீட்டு வாடகை, கரன்ட் பில், மளிகை சாமான், குழந்தைகளின் கல்விக் கட்டணம், இஎம்ஐ என பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துகிறோம்.

    தாய்மாமன் சீரை முதல்வர் விஜய் கொடுத்து விடுவார், பாட்டி சீர், அத்தை சீர் எல்லாம் நாம் தானே கொடுக்க வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் பட்ஜெட்டை ஒரு குடும்பத் தலைவி போடுவார்.

    மாற்று வருவாய் குறித்த முழு திட்டங்கள் வேண்டும். அவுட்சோர்சிங் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். தற்காலிக பணி செய்பவர்களுக்கு நிரந்தர பணியிடமாக ஆக்கி கொடுக்க வேண்டும்.

    Advertisement

    தனியார் நிறுவனங்களில் அந்த இளைஞர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. சில ஆயிரம் அரசு பணிகளுக்கு பல லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அதிலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்வு எழுதியோர் எழுதி கொண்டே இருக்கிறார்கள்.

    எனவே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். 35 பெரிய ஆறுகள் இருக்கின்றன. அதில் 10 கி.மீ. தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்டினால் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கலாம்.

    இதன் மூலம் 100 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். காவிரிக்காக கர்நாடகாவிடமும் முல்லை பெரியாறுக்காக கேரளாவிடமும் கிருஷ்ணா கோதாவரிக்காக ஆந்திராவிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை.

    Advertisement

    நமக்கு பெய்யும் மழையை கொண்டே தடுப்பணைகளை கொண்டு சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஏரி, குளங்களை தூர்வாரினாலும் நீரை சேமிக்கலாம். ஒரு மீட்டர் தூர்வாரினாலே போதும். ஏரியில் தண்ணீர் இருந்தால் விவசாய கிணறுகளில் தண்ணீர் இருக்கும், அவர்கள் விவசாயம் செய்யலாம். இப்படியாக 150 டிஎம்சி தண்ணீரை நாமே தேக்கி வைக்கலாம். இந்த திட்டங்கள் எல்லாம் வேளாண் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்த்தேன்.

    ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும். சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்றால் அது மிகப் பெரிய சிக்கல். மிகப் பெரிய போராட்டம் என்பதை நான் கண்கூட பார்த்திருக்கிறேன். மிகப் பெரிய ஒரு புகையிலை கும்பலுக்கு எதிராக போராடிதான் அன்புமணி பொது இடங்களில் புகைப்பிடிக்க தடையை கொண்டுவந்தார்.

    Advertisement

    இதற்காக அவருக்கு அமெரிக்காவில் எழுந்து நிற்கு கைதட்டி பாராட்டினார்கள். அவருக்கு WHO விருது வழங்கியுள்ளது. மத்திய அமைச்சராக அன்புமணி இருந்த போது கிராமப்புற சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கு, 108 ஆம்புலன்ஸ் போன்ற திட்டங்களை கொடுத்ததால் உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியது.

    இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், பில்கேட்ஸ், பில் கிளிண்டன், கோஃபி அன்னான் போன்ற வாங்கிய விருதுகளை அன்புமணி பெற்றுள்ளார். போலியோ ஒழிப்பிற்காக டெல்லியில் விருது கிடைத்தது. இவ்வாறு சவுமியா தெரிவித்தார்.

    English Summary

    PMK MLA Sowmiya Anbumani says that Crop loan should be waived off completely. He also praised about good works done by TVK Government.