மனசாட்சியே இல்லா ‘கம்பெனி’ அது.. சட்டசபையில் கொந்தளித்த செளமியா அன்புமணி! அமைச்சர் கொடுத்த விளக்கம்!

  • சென்னை: தமிழ்நாட்டிலே மனசாட்சி இல்லாத நிறுவனம் ஒன்று இருக்கிறது என்றால் அது என்எல்சி நிறுவனம்தான் எனவும், நிலம் கொடுத்த உள்ளூர் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை கொடுக்காமல் நீட் தேர்வு போல நுழைவுத் தேர்வு வைத்து வெளி மாநில ஆட்களை என்எல்சி நிறுவனம் தேர்வு செய்து வருகிறது என பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி மிகக் கடுமையாக பேசியுள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் துரை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சட்டசபை அலுவல் தொடங்கிய போது நேரமில்லா நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    Advertisement

    கேள்வி நேரம் அவையில் எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் மாவீரன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

    தமிழ்நாடு சட்டசபை

    அதன் மீது உறுப்பினர்கள் பேசிய நிலையில் அமைச்சர் ஆதார் அர்ஜுனா பதில் அளித்தார். தொடர்ந்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய பாமக எம்எல்ஏவும் சட்டமன்ற குழு தலைவர் செளமியா அன்புமணி," தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாமல் இயங்கும் நிறுவனம் என்றால் அது என்எல்சி நிறுவனம் தான். ஒரே இரவில் விவசாயிகளை தூக்கி போட்டுவிட்டு நிலங்களை கையகப்படுத்திக் கொண்டார்கள்.

    Advertisement

    சௌமியா அன்புமணி

    நிலத்தடி நீரை உறிஞ்சு நிலத்தையும் பாழ்படுத்தி விட்டார்கள். நிலத்தை எடுத்துக் கொண்டு அந்த மண்ணின் பூர்வீக மக்களுக்கு வேலை கொடுக்காமல் தற்போது தேர்வு வைத்து வெளி மாநில ஆட்களை தேர்வு செய்கிறார்கள். நீங்கள் என்ன மருத்துவ படிப்பிற்கு ஆள் எடுக்கிறீர்கள் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எல்லாம் வைக்கிறீர்களே?

    என்எல்சி

    என்எல்சி நிறுவனம் எப்போதும் தவறான தகவல்களை மட்டும் தான் கொடுப்பார்கள். சிஎஸ்ஆர் நிதியை கூட அவர்கள் முழுமையாக மக்களுக்கு பயன்படுத்துவதில்லை. சாலை போட்டோம், மேம்பாலம் கட்டினோம் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களது வளாகத்திற்குள்ளேயே போட்டுக் கொள்வார்கள். பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் எதுவும் செய்திருக்க மாட்டார்கள்.

    Advertisement

    அமைச்சர் கீர்த்தனா

    அதற்கு பதில் அளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, என்.எல்.சி நிறுவனத்தைப் பற்றி அதிகமான புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது. தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரையில் விவசாயிகள் பக்கம் தான் இருக்கும். இந்த அரசு அமைந்து மூன்று மாதம்தான் ஆகிறது நாங்கள் நீங்கள் கேட்டது போல கமிட்டி அமைத்து இருக்கிறோம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது நிச்சயமாக நாங்கள் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் எதிராக நடந்து கொள்ள மாட்டோம் என விளக்கம் கொடுத்தார்.

    English Summary

    Sowmiya Anbumani criticises NLC over land acquisition and jobs, while Tamil Nadu minister assures action to protect farmers.