குழந்தைகளுக்கு No சொல்ல கற்றுக் கொடுங்க! No சொன்னால் தான் ஹீரோ! செளமியா அன்புமணி அட்வைஸ்!

  • சென்னை: தமிழகத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோர் சதவீதம் 9 ல் இருந்து தற்போது 12 ஆக அதிகரித்துள்ளது. இது மக்கள் தொகையில் சுமார் 50 லட்சம் எனவும், குழந்தைகளுக்கு No சொல்ல கற்றுக் கொடுக்க வேண்டும். No சொன்னால் தான் ஹீரோ என பாமக எம் எல் ஏ செளமியா அன்புமணி கூறியுள்ளார்.

    Advertisement

    ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாய்டு கல்லூரியில் பெண்கள் கலந்துகொண்ட Women Lead, Drugs Recede என்ற மாரத்தான் நடைபெற்றது. பாதுகாப்பான சாலைகளை உருவாக்க போதையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாரத்தான் நடைபெற்றது.

    Advertisement

    இதில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மாராத்தான் போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி பதக்கங்களையும், சான்றிதழையும் வழங்கினார்.

    சௌமியா அன்புமணி

    முன்னதாக மேடையில் பேசிய சௌமியா அன்புமணி," அனைவருமே மாரத்தானை நிறைவுசெய்துள்ளீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள். வீட்டை பாதுகாப்பது அப்பா. ஆரோக்கியமான வீட்டை உருவாக்குவது அம்மா என்றுதான் இருக்கும். ஆனால், இன்று பாதுகாப்பான சாலைகளை உறுதி செய்ய பெண்கள் முன்னின்றுள்ளீர்கள்.

    போதைப் பொருள்

    இது புரட்சிகரமானது ஒன்று. வீட்டை பாதுகாக்கும் பொறுப்பு தற்போது பெற்றோர் இருவருக்குமே உள்ளது. பாதுகாப்பான சாலை என்பது போலீஸ் பாதுகாப்பு, சிசிடிவி கேமரா அமைப்பது, மின் விளக்கு அமைப்பது மட்டும் இல்லை. நல்ல மனிதர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அமைதியான சாலை, பாதுகாப்பான சாலைகளை உருவாக்க முடியும். அதற்கு போதை பொருளை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் சென்னையில்தான் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது.

    Advertisement

    கஞ்சா புழக்கம்

    தமிழகத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோர் சதவீதம் 9 ல் இருந்து தற்போது 12 ஆக அதிகரித்துள்ளது. இது மக்கள் தொகையில் சுமார் 50 லட்சம். இது போதைப்பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இல்லை. போதைப்பொருளுக்கு அடிமையானோர் சதவீதம். சென்னையில் 10 லட்சம் கிலோ கஞ்சா புழக்கத்தில் சுற்றுவதாக சொல்கிறார்கள்.

    No சொன்னால் ஹீரோ

    குழந்தைகளுக்கு No சொல்ல கற்றுக் கொடுக்க வேண்டும். No சொன்னால் தான் ஹீரோ என்பதை சொல்லிக்கொடுங்கள். கோயம்பேடு பேருந்துநிலையத்தை காலி செய்து அங்கு மால் கொண்டுவருவதாக சொல்கிறார்கள். அங்கு பூங்கா அமைக்க வேண்டும் என்று பசுமைதாயகம் வலியுறுத்தி வருகிறது. சென்னையில் 10 ஏக்கருக்கு மேல் பார்க் இல்லை. டெல்லி, பெங்களூரில் 300, 500 ஏக்கருக்கு மேல் பார்க் உள்ளது. பெரிய பூங்கா அமைக்கும் போது பெண்கள் மார்ஷல், உடற்பயிற்சி செய்யவும், குழந்தைகள் விளையாடவும் பெரிய இடமாக இருக்கும்." என்றார்.

    English Summary

    Sowmiya Anbumani urges parents to teach children to reject drugs, highlighting rising addiction concerns and the need for safer roads.