இனியும் தவெகவை நம்பி போக முடியாது.. உஷாரான சிவி சண்முகம்.. நிம்மதியில் எடப்பாடி பழனிசாமி!

  • சென்னை: தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அமைச்சரவையில் இடம் தருகிறோம் என்று கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதால், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பு தவெகவை நம்பி எந்த நகர்வையும் எடுத்து வைக்க முடியாது என்று ஆலோசித்திருப்பது தெரிய வந்துள்ளது.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக கணிசமான வாக்குகள் பெற்று வெற்றியை பெற்றுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிமுகவின் தோல்வி எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் உள்ளிட்ட தரப்புக்கு சாதகமான ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்த தோல்விக்கு பின் மீண்டும் ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருக்கின்றனர்.

    Advertisement

    இந்த ஆலோசனை கூட்டம் நடந்த மறுநாளே அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து மேலும் 15 எம்எல்ஏ-க்கள் தவெக பக்கம் நகரப் போவதாக பேசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அதிமுகவினர் கொந்தளித்தனர். இருப்பினும் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் சிவி சண்முகம், அதிமுகவின் தோல்வி வருத்தம் அளிக்கிறது. அனைவரும் ஒருங்கிணைந்து முடிவு எடுத்தால், அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க தயார். பொதுக்குழுவை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தார். முதற்கட்டமாக எடப்பாடி பழனிசாமியை தலைமைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டமாக இருப்பதாக தெரிகிறது.

    Advertisement
    இபிஎஸ் முந்துவதற்குள் உடனே முடியுங்கள்! வேலுமணி - சிவி சண்முகத்தை விரட்டும் முதல்வர் விஜய்!

    அதுமட்டுமல்லாமல் தவெகவை நம்பி மீண்டும் இன்னொரு அடியை எடுத்து வைக்க சிவி சண்முகம் தரப்பு விரும்பவில்லை. ஏற்கனவே தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி தருகிறோம் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை நம்பி சிவி சண்முகம் தரப்பை சேர்ந்த 25 எம்எல்ஏ-க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இதன்பின் தவெக அப்படியே ஒதுங்கி கொள்ள, ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏ-க்கள் வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து ஐக்கியமாகினர். அமைச்சர் பதவியும் யாருக்கும் கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் தவெக நோக்கி செல்ல முடியாது என்று சிவி சண்முகம் உறுதியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனால் இனியும் அதிமுக எம்எல்ஏ-க்கள் யாரும் ராஜினாமா செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

    English Summary

    SP Velumani and CV Shanmugam Factions Vow Not to Rely on TVK After Cabinet Betrayal Rumors