“மைக் முன்னாடிதான் பேசுறாங்க.. ஆக்‌ஷன் இல்லை.. வேலுமணி வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி!

  • சென்னை: "அனைவரும் மைக் முன்னால் பேசுகின்றனர்.. ஆனால் ஊழலை ஒழிக்க எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை" என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணிக்கு எதி​ரான வழக்​கில் குற்றம் சாட்​டப்​பட்ட 2 ஐஏஎஸ் அதி​காரி​களுக்கு எதி​ராக வழக்​குத்​ தொடர அனு​மதி பெறாமல் ஆண்டுக்​கணக்​கில் இழுத்​தடித்து வரு​வ​தாக கண்​டனம் தெரி​வித்​துள்​ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

    Advertisement

    அதி​முக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி, முந்​தைய அதி​முக ஆட்​சியில் உள்​ளாட்​சித் ​துறை அமைச்​ச​ராக பதவி வகித்​த​போது கோவை, சென்னை மாநக​ராட்​சிகளில் பல்​வேறு பணி​களுக்கு ஒப்​பந்​தங்​கள் வழங்​கிய​தில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாக லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​சார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

    Advertisement

    இந்த வழக்​கில் உயர்நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுப்​படி குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​ய​வில்லை எனக் கூறி லஞ்ச ஒழிப்​புத் ​துறைக்கு எதி​ராக அறப்​போர் இயக்​கம், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடர்ந்​திருந்​தது.

    ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது, "இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கே.எஸ்.கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்?" என்று நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட 2 ஐஏஎஸ் அதி​காரி​களான கந்​த​சாமி, விஜய கார்த்​தி​கேயன் ஆகியோ​ருக்கு எதி​ராக வழக்கு தொடர அனு​மதி கோரி கடந்த ஆண்டு நவம்​பரில் அனுப்​பிய கடிதம் இன்​னும் மத்​திய அரசிடம் நிலு​வை​யில் இருப்​ப​தாக தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

    Advertisement

    அதற்கு கடும் கண்​டனம் தெரி​வித்த நீதிப​தி ஆனந்த் வெங்கடேஷ், "இந்த வழக்​கில் நான் யாரை​யும் சும்மா விட​மாட்​டேன். 2 ஐஏஎஸ் அதி​காரி​களுக்கு எதி​ராக வழக்கு தொடரஅனு​மதி பெறு​வ​தில் இன்​னும் எத்​தனை நாட்​களாக இதே காரணத்தை திரும்​பத் திரும்ப சொல்​லிக்​கொண்டு இருப்​பீர்​கள்.

    எனவே, அடுத்த விசா​ரணை​யின்​போது இந்த வழக்​கின் நிலை குறித்த ஆவணங்​களு​டன் மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆஜராக வேண்​டும்" எனக் கூறி விசா​ரணையை ஜூலை 17 ஆம் தேதிக்கு தள்​ளி​வைத்​தார்.

    மேலும், "ஊழலை ஒழிப்​ப​தாக மைக் முன்​பாக அனை​வரும் பேசுகின்​றனர். அப்​படி பேசி​னால் மட்​டும் போதாது. அதற்​கான நடவடிக்​கைகளை​யும் எடுக்க வேண்​டும். தங்​களை யாரும் தொட முடி​யாது என அனைத்து அரசி​யல்​வா​தி​களும் நினைக்​கின்​றனர். இந்த குற்​றம் நடந்து தற்​போது 2 தேர்​தல்​கள் முடிந்​து​விட்​டன. வழக்​கில்​ குற்​றம்​ ​சாட்​டப்​பட்​ட​வரை மக்​கள்​ மீண்​டும்​ தேர்​ந்​தெடுத்​துள்​ளனர்​" எனவும்​ நீதிப​தி கருத்​து தெரி​வி்த்துள்ளார்​.

    English Summary

    “Everyone speaks before the mic, yet no measures are taken to eradicate corruption,” expressed Madras High Court Justice Anand Venkatesh with dissatisfaction. He criticized the fact that proceedings against two IAS officers—accused in the case involving former AIADMK Minister SP Velumani—have been stalled for years due to the failure to obtain the necessary sanction to prosecute them.