சட்டசபையில் போட்டி அதிமுக.. ரூட் போட்டு கொடுத்த அமித்ஷா.. களமிறங்கிய எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம்!

  • சென்னை: சட்டசபையில் போட்டி அதிமுகவை உருவாக்க சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பு முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே பட்ஜெட் விவாதத்திற்கு முன்பாக அமைச்சர் ஆனந்த் மற்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆகியோரை சந்தித்திருக்கின்றனர். ஆனாலும் இதுதொடர்பாக தவெக தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    Advertisement

    வேளாண் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்ட பின் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் கேபி அன்பழகன் ஆகியோர் அமைச்சர் ஆனந்த் அறைக்கு சென்று சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் அமைச்சர் செங்கோட்டையனும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    தற்போது எஸ்பி வேலுமணி தரப்பு சபாநாயகர் ஜேசிடி பிரபாகரையும் சந்தித்திருப்பது தெரிய வந்துள்ளது. பட்ஜெட் விவாதத்திற்கு முன் இந்த சந்திப்பு நடப்பதற்கான பின்னணி என்ற சந்தேகம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் அரசியல் செய்து வருகின்றனர்.

    அதிமுகவை கைப்பற்றும் எண்ணத்தில் இருந்த அவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி பழனிசாமி பக்கமே நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதனால் அதிமுக தலைமையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியை அப்புறப்படுத்த பாஜகவின் உதவியை எஸ்பி வேலுமணி தரப்பு நாடியது. அப்படியில்லை என்றால் தவெக பக்கம் செல்ல விரும்புகிறோம் என்றும் கூறி வந்தது.

    Advertisement

    கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக அமித்ஷா அமைதியாக இருந்து வந்தார். இதனிடையே எஸ்பி வேலுமணி தரப்பு கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அமித்ஷா தரப்பில், தவெகவில் இணைய தேவையில்லை.. இப்போதைக்கு போட்டி அதிமுகவை உருவாக்க முயற்சியுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

    இதனால் முதற்கட்டமாக சட்டசபையில் போட்டி அதிமுகவை உருவாக்க எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் முயற்சித்திருக்கின்றனர். அதாவது பட்ஜெட் விவாதத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு கொடுத்த பின், தங்களுக்கும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஆனந்த் மற்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கேட்டிருக்கின்றனர்.

    Advertisement

    இதற்கு ஜேசிடி பிரபாகர் மற்றும் ஆனந்த் ஆகிய இருவருமே முதல்வர் விஜய்யிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறோம் என்று பதில் அளித்திருக்கின்றனர். இதனால் எஸ்பி வேலுமணி தரப்பு அப்செட்டாகி இருக்கிறது. இதனால் எஸ்பி வேலுமணி தரப்பு அடுத்ததாக என்ன திட்டத்தை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English Summary

    SP Velumani: CV Shanmugam, SP Velumani Attempting to Form Parallel AIADMK in Tamil Nadu Assembly