5 மணி நேரம் ஆலோசனை.. சிவி சண்முகம் வீட்டில் கூடிய அதிமுக அதிருப்தி நிர்வாகிகள்.. என்ன நடந்தது?

  • சென்னை: சென்னை பாலவாக்கத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வீட்டில் நேற்று சுமார் 5 மணி நேரம் ஆலோசனை நடந்திருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கேபி அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக்கான பின்னணி என்பது தொடர்பாக பார்க்கலாம்.

    Advertisement

    அதிமுகவில் தங்களுக்கு மீண்டும் பழைய பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 9 நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு 2 முறை கடிதம் எழுப்பினர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. இதனால் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் அதிருப்தி எம்எல்ஏ-க்களாகவே வலம் வருகின்றனர்.

    Advertisement

    சிவி சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த போதும் கூட, எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் கேபி அன்பழகன் ஆகிய மூவரும் அமைச்சர் ஆனந்த் அறைக்கு சென்று ஆலோசித்தனர். இந்த ஆலோசனையின் போது அமைச்சர் செங்கோட்டையனும் உடனிருந்தார்.

    அப்போது அதிமுகவில் தங்களை தனி அணியாக கருத வேண்டும் என்று எஸ்பி வேலுமணி தரப்பு கேட்டு கொண்டதாக சொல்லப்பட்டது. ஒரு பக்கம் இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அவர்கள் தவெக பக்கம் நகரும் முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். இருப்பினும் குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த பதில் விவாதமாகியது.

    Advertisement

    இப்படியான சூழலில் சென்னை பாலவாக்கத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வீட்டில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. நேற்று சட்டசபைக் கூட்டம் முடிவடைந்த பின் சுமார் 5 மணி நேரம் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். இந்த ஆலோசனையில் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், அன்பழகன் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் பங்கேற்று இருக்கின்றனர்.

    இதனால் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்களின் அடுத்தக் கட்ட திட்டம் குறித்து முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே போட்டி அதிமுக அணியை சட்டசபையில் உருவாக்க எஸ்பி வேலுமணி உருவாக்க முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் இவரின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    English Summary

    SP Velumani Hold 5-Hour Secret Meeting at CV Shanmugam’s Residence with AIADMK Seniors Cadres