விஜய் கட்சியில் வேலுமணி? மைக் பிடிச்சதும் 'ஷாக்' கொடுத்த கொங்கு புள்ளி! சென்னை ஏர்போர்ட் ட்விஸ்ட்!

  • சென்னை: கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் தவெகவில் இணைய போகிறீர்களா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

    Advertisement

    கோவை டூ சென்னை... விமானம் தரை இறங்கியதுமே செய்தியாளர்கள் எஸ்.பி.வேலுமணியைச் சூழ்ந்து கொண்டனர். சமீபகாலமாக அதிமுகவில் நிலவி வரும் சலசலப்புகளும், 'விஜய்யின் தவெக-வில் வேலுமணி இணையப் போகிறார்' என்ற கிசுகிசுக்களும் காற்றில் பறந்து கொண்டிருக்க, அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே அதுதான்.

    Advertisement

    "சார் தவெகவில் இணையப் போகிறீர்களா?" என செய்தியாளரின் இந்தக் கேள்விக்கு, தனது டிரேட்மார்க் சிரிப்புடன் வேலுமணி கொடுத்த பதில் ஒரு 'மாஸ்' ரகம்!

    "ஏன்... நான் அதிமுகவில் இருக்கக் கூடாதா? நீங்களே ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா?" என்று எதிர் கேள்வி கேட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். "வாரத்துக்கு ரெண்டு நாள் சென்னைக்கு வருவேன், அதுபோலத்தான் இப்போதும் வந்திருக்கிறேன். இதில் எந்தப் பரபரப்பும் இல்லை" என்று கூலாகச் சொன்னாலும், அடுத்தடுத்த கேள்விகளில் அதிமுகவின் உட்கட்சிப் பூசலை அவர் வெளிப்படையாகவே கொட்டினார்.

    "பதவி முக்கியமல்ல... பாசம் தான் முக்கியம்!"

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்த புதிய கட்சிப் பதவிகளில், எஸ்.பி.வேலுமணிக்கு 'துணைப் பொதுச் செயலாளர்' பதவி வழங்கப்பட்டது. ஆனால், இந்தப் பதவியை ஏற்க தான் தயாராக இல்லை என்பதை வேலுமணி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அதற்கு அவர் சொல்லும் காரணம், ஒரு 'கேப்டன்' போலத் தெரிகிறது: "என்னை நம்பி வந்த 9 மாவட்டச் செயலாளர்களுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. அவர்களை அப்படியே நடுத்தெருவில் விட்டுவிட்டு, எனக்கு மட்டும் பதவி கிடைத்தால் அதை எப்படி ஏற்க முடியும்? வீரமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் அந்தந்த மாவட்டத்தின் ஜாம்பவான்கள். கட்சிக்காக உழைத்தவர்கள். அவர்களுக்குப் பதவி தராமல் எனக்கு மட்டும் தருவது நியாயமில்லை. அதனால் இந்தப் பதவியை நான் ஏற்கப்போவதில்லை!"

    அதிமுகவில் அடுத்தது என்ன?

    ஏற்கனவே சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்ற முக்கியத் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகப் பேசப்படும் நிலையில், வேலுமணியின் இந்த 'பதவி மறுப்பு' எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    "எந்த முடிவாக இருந்தாலும் உங்களிடம் (செய்தியாளர்களிடம்) சொல்லிவிட்டுத்தான் செய்வேன்" என்று வேலுமணி முடித்திருப்பது அதிமுகவின் 'மேற்கு மண்டல' அரசியலில் ஏதோ ஒரு பெரிய மாற்றம் நிகழப்போகிறது என்பதையே கட்டியம் கூறுகிறது.

    மொத்தத்தில்: விஜய் கட்சிக்குச் செல்வாரா மாட்டாரா என்பதைத் தாண்டி, "என் டீமுக்கு பதவி இல்லைன்னா எனக்கும் வேண்டாம்" என்று வேலுமணி காட்டியிருக்கும் 'விசுவாசம்', அதிமுக தலைமைக்கு விடப்பட்டிருக்கும் ஒரு பகிரங்க எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது!

    English Summary

    Former Minister Sp Velumani replies about TVK joining question at Chennai Airport. He also wants EPS to give post for his supporters too.