Silence! நீங்க அங்க பேசுறது! எனக்கு இங்க கேக்குது! எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை கண்டித்த சபாநாயகர்!

  • சென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் பட்ஜெட் உரையாற்றிக் கொண்டிருந்த போது அதை கவனிக்காமல் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசிக் கொண்டிருந்ததை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டித்தார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் இன்று அமைச்சர் வினோத்தால் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வினோத், "நீர் வளத் துறை, பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு இன்றியமையாத ஆதாரமான மழை நீரை அணைக்கட்டுகள், ஏரிகளில் சேமித்து வைத்து திறம்பட பகிர்ந்தளிப்பது நீர்வளத்துறையின் முக்கியமான குறிக்கோளாகும்.

    Advertisement

    அணைகளில் இருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்படும் நீர் தங்கு தடையின்றி கடைமடை பகுதிகள் வரை விரைந்து செல்ல ஏதுவாக என படித்துக் கொண்டிருந்த போது சபாநாயகர் ஜேசிடி பிராபகர் அவரது பேச்சை மணி அடித்து நிறுத்தினார்.

    சபாநாயகர் பேசுகையில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அங்கு உட்கார்ந்து பேசுவது இங்க எனக்கு நன்றாக கேட்கிறது. எனவே மற்றவர்களுக்கு கேட்காமல் அமைதியாக உங்களுக்குள் பேசலாம். அவையில் பட்ஜெட் வாசிப்பின்போது பேசாமல் இருப்பது நல்லது. பேசி பட்ஜெட் படிப்பதற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்ட சபாநாயகர், அமைச்சர் பேச்சை தொடருமாறு தெரிவித்தார்.

    Advertisement

    முன்னதாக பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்வதாக கூறிய வினோத், திடீரென முதல்வர் விஜய்யை புகழ் தொடங்கினார். கோட் சூட் போட்ட விவசாயி, பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயகன், விசில் தனியாக ஒலித்தாலும் கம்பீரம் குறையாது.

    முதலமைச்சர் விஜய் பேசுவதே தலைப்புச் செய்தி அல்லது அவரை பற்றி பேசுவது தான் தலைப்புச் செய்தி. விவசாயிகள் வெற்றி பெறாவிட்டால் வெற்றி தமிழகத்தை நாம் காண முடியாது, வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் பயணிக்க முடியாது என விஜய் அறிவுரை கூறினார்.

    முதலமைச்சர் விஜய் அடுத்த பிறவியில் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்றார், ஆனால் இப்போதே ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் மகனாக உள்ளார் முதலமைச்சர் விஜய் என புகழ்ந்து கொண்டே இருந்தார்.

    Advertisement

    அப்போது திமுக எம்எல்ஏக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், வேளாண் துறை அமைச்சர் பட்ஜெட்டில் என்ன இருக்கிறதோ அதை மட்டும் வாசியுங்கள்" என்றார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை விஜய்யை புகழ்ந்த அமைச்சர், பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அது போல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகும் முதல்வர் விஜய்யை வினோத் பாராட்டி பேசியிருந்தார். இதை எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கண்டித்தனர். அமளியில் ஈடுபட்டனர். அந்த புகழ்ச்சிகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு கோஷமிட்டனர்.

    இதையடுத்து சபாநாயகர், அவர்களை அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டு, "அமைச்சர் இங்கு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் உள்ளதை தவிர அவர் பேசிய பேச்சுக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டியவைகளாக இருந்தால் மட்டும் நீக்குவேன். அமைச்சருக்கு ஆரம்பத்திலேயே நான் அறிவித்தினேன். எனவே நீங்கள் அமருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்" என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்திருந்தார்.

    English Summary

    Speaker JCD Prabhakar asked DMK MLAs to be calm as the murmering of Opposition MLAs amid Agriculture Budget tabled.