ஆஹா... அதிமுக மாஜிகள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி! ஆக்‌ஷனி இறங்கிய ஸ்பீக்கர்! விஜய்க்கு சிக்கல்?

  • சென்னை: அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மாஜி அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேருக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார். வரும் 17ஆம் தேதி தகுதிமிக்க விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை நடத்த உள்ளதாகவும், அதற்குப் பிறகு சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    Advertisement

    இது ஒருபுறம் இருக்க அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியே தோல்விக்கு காரணம் என கைகாட்டி விட்டு பலரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வெள்ளமண்டி நடராஜன் என முக்கிய முகங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர்.

    அதிமுக மாஜி எம்எல்ஏக்கள்

    இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர்கள் ஆகிவிடலாம் என்ற ஆசையில் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர் சிலர். அதில் மரகதம் குமரவேல், விஜயபாஸ்கர்களுக்கு பதவி வழங்கியிருக்கிறார். முன்னதாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் கட்சியின் கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    Advertisement

    தகுதி நீக்க நடவடிக்கை

    அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக மனு அளித்தது. பின்னர் 21 எம்எல்ஏக்களை மன்னித்து நடவடிக்கையை கைவிடுவதாக எடப்பாடி பழனிச்சாமி கடிதம் கொடுத்தார். அதே நேரத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் சி விஜயபாஸ்கர் ஆகியோரும் ராஜினாமா செய்த நிலையில் மொத்தம் 6 பேர் மீது தகுதி நீக்க வழக்கு இன்னும் விசாரணை விசாரணையில் உள்ளது.

    எம்எல்ஏக்கள் ராஜினாமா

    இதற்கிடையே எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் உத்தரவை எதிர்த்து அதிமுக சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சபாநாயகர் ராஜினாமாவை ஏற்றது செல்லும் என தீர்ப்பு அளித்தது. அதே நேரத்தில் தகுதி நீக்க வழக்கில் இரண்டு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    Advertisement

    ஜேசிடி பிரபாகர்

    இதை அடுத்து தற்போது 4 எம்எல்ஏக்கள் மீதான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 10ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை நான்கு பேரிடமும் நேரில் விசாரணை நடத்தப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞரும் அதில் கலந்து கொள்ள உள்ளார். 17ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் இடம் அதற்கு பிறகு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தனது முடிவை அறிவிப்பார் என சொல்லப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழகம்

    தற்போது ஆறு பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கும் நிலையில் மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் ஏற்கனவே இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்களாக உள்ளனர். ஒருவேளை இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Tamil Nadu Speaker JCD Prabhakar schedules a final hearing on the disqualification petitions against four former AIADMK MLAs.