சென்னை: ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி சென்னை டூ திருச்சிக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு ரயில்களும், சென்னை தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு நாளை சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. மொத்தம் 5 முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பண்டிகை காலங்கள் மற்றும் வார விடுமுறைகளின் போது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும். டிக்கெட்டுகளும் கிடைக்காது. ஆம்னி பஸ்களிலும் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கும். இதனால் பலரும் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்து பயணிப்பார்கள்.
கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக அவ்வப்போது சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவிக்கும். சாதாரண நேரங்களிலேயே இப்படி என்றால், ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை மட்டுமின்றி வார விடுமுறை நாட்களும் வருகின்றன. இதனால் ஏராளமான பயணிகள் குடும்பத்துடன் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பிளான் செய்துள்ளனர். ஆனால் டிக்கெட் கிடைக்குமோ என்னமோ என கவலைப்பட்டு இருப்பவர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக தெற்கு ரயில்வே 5 முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூரில் இருந்து நாளை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06191) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் அதிகாலை 4.05 மணிக்கு திருச்சி சென்றடையும். இதே போன்று திருச்சியில் இருந்து நாளை மறுநாள் சனிக்கிழமை காலை 5.50 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06192), அதேநாள் காலை 11.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும். * சென்னை எழும்பூரில் இருந்து நாளை மறுநாள் சனிக்கிழமை மேலும் ஒரு முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06193) இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும். மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து வரும் 20 ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06194), மறுநாள் காலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண்.06161) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, நாளை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு மானாமதுரை சென்றடையும். இதே போன்று மறுமார்க்கத்தில், மானாமதுரையில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06162) சென்னை தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை மறுநாள் சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு அதேநாள் இரவு 8.30 மணிக்கு சென்னை தாம்பரம் வந்தடையும். இதே போன்று சென்னை தாம்பரத்தில் இருந்து நாளை மறுநாள் சனிக்கிழமை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06159) இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 11 மணிக்கு மானாமதுரை சென்றடையும். மறுமார்க்கமாக, மானாமதுரையில் இருந்து வரும் 20 ஆம் தேதி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06160) இயக்கப்படுகிறது. இந்த ரயில் வருகிற 20 ஆம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.5 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்
சென்னை டூ திருச்சிக்கு சிறப்பு ரயில்
தீபாவளி சிறப்பு ரயில்கள்.. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரைக்கு குட்நியூஸ்
நாளை மறுநாள் புறப்படும்
தாம்பரம் டூ மானாமதுரை
Special train: நெல்லை டூ சென்னைக்கு சிறப்பு ரயில்.. பயணிகளுக்கு சர்ப்ரைஸ் தந்த தெற்கு ரயில்வே
நாளை மறுநாளும் சிறப்பு ரயில்