Special Train: தாம்பரம் டூ தென்காசிக்கு நாளை சிறப்பு ரயில்.. பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • சென்னை: விநாயகர் சதுர்த்தியை சொந்த ஊரில் கொண்டாட வசதியாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு இந்த சிறப்பு ரயில் நாளை வெள்ளிகிழமை இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. எனவே சொந்த ஊர் செல்ல நினைக்கும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

    Advertisement

    வரும் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. வார விடுமுறை நாட்களுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால், சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    சென்னை டூ தென்காசிக்கு சிறப்பு ரயில்

    இதனால், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்தும் ரயில்கள், பேருந்துகள் அனைத்திலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த்துவிட்டன. தனியார் ஆம்னி பேருந்துகளிலும் சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல கட்டணம் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தட்கல் டிக்கெட் புக்கிங்கிலும் டிக்கெட் கிடைக்காததால் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்த நிலையில், பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சென்னை தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    Advertisement

    எப்போது புறப்படும்?

    வண்டின் எண்: 06089/06090 தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் (சனிக்கிழமை) காலை 6.15 மணிக்கு தென்காசி சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக திருச்சிக்கு நள்ளிரவு 12.25 மணிக்கு சென்றடையும்.

    5 நிமிடங்கள் திருச்சியில் நிற்கும் இந்த ரயில் 12.30 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவல்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில் கடையநல்லூர் வழியக தென்காசிக்கு காலை 6.15 மணிக்கு சென்றடையும்.

    Advertisement

    இன்று முன்பதிவு தொடங்குகிறது

    மறுமார்க்கத்தில் இந்த ரயில் 14 அம் தேதி செங்கோட்டையில் இருந்து புறப்படும். செங்கோட்டையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதுரைக்கு மாலை 6.50 மணிக்கு வந்து சேரும். மதுரையில் இருந்து 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு அதிகாலை 3.20 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. எனவே சொந்த ஊர் செல்ல நினைக்கும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

    English Summary

    Special Train: Southern Railway has announced a special train to facilitate travel for those wishing to celebrate Vinayagar Chaturthi in their hometowns. This special train will operate from Tambaram, Chennai, to Tenkasi tomorrow, Friday. Ticket reservations for this train open today at 8:00 AM. Passengers planning to travel to their hometowns are encouraged to make use of this opportunity.