Special train: நெல்லை டூ சென்னைக்கு சிறப்பு ரயில்.. பயணிகளுக்கு சர்ப்ரைஸ் தந்த தெற்கு ரயில்வே

  • சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு சொந்த ஊர் சென்றுள்ள மக்கள் மீண்டும் சென்னைக்கு புறப்பட வசதியாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி வரும் 20 ஆம் தேதி நெல்லையில் இருந்து கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    Advertisement

    வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திங்கட்கிழமை ஆயுத பூஜையும், 20 ஆம் தேதி விஜய தசமியும் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்களும் விடுமுறை தினம் என்பதால் வரும் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர் விடுமுறை நாட்களாகியுள்ளன.

    Advertisement

    சொந்த ஊர் செல்லும் பயணிகள்

    இதனால், சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காகவும் சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

    Diwali bonus: ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்! தீபாவளி போனஸ் அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?

    இதனால், சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. அதேபோல, பஸ்களிலும் ஒரு டிக்கெட் கூட இல்லை என சொல்லும் அளவிற்கும் அனைத்தும் காலியாகிவிட்டன. இதனால், சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்கியுள்ளது.

    Advertisement

    நெல்லை டூ சென்னை சிறப்பு ரயில்

    விடுமுறை முடிந்து 20 ஆம் தேதி முதல் மீண்டும் சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயிலை இயக்குமா? என்று பயணிகள் எதிர்பார்த்த நிலையில், நெல்லையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 20 ஆம் தேதி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    ரயிலில் சத்தமாக ரீல்ஸ், பாட்டு கேட்காதீங்க! மீறினால் 6 மாதம் சிறை.. 5,000 அபராதம்! தெற்கு ரயில்வே

    தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டதாவது:- வண்டி எண் 06146 நெல்லையில் இருந்து அக்டோபர் 20 ஆம் தேதி இரவு 11.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் வழியாக மதுரைக்கு நள்ளிரவு 1.55 மணிக்கு வந்து சேரும்.

    Advertisement

    நாளை காலை முன்பதிவு

    மதுரையில் இருந்து நள்ளிரவு 2.05 மணிக்கு புறப்படும் ரயில் திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு அதிகாலை 4.20 மணிக்கு சென்றடையும். திருச்சியில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் ரயில் ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு புதன் கிழமை காலை 10.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    English Summary

    Special train: Southern Railway has announced a special train to facilitate the return journey to Chennai for people who traveled to their hometowns for the Ayudha Puja and Vijayadashami festivals. Accordingly, a special train has been announced to run on the 20th from Nellai to Chennai Tambaram via Kovilpatti, Virudhunagar, Madurai, and Trichy. Reservations for this train open tomorrow at 8:00 AM.