செம்மஞ்சேரி விளையாட்டு நகரம் திட்டம் ரத்து.. முதல்வர் விஜய் எடுத்த முடிவுக்கு என்ன காரணம்? பின்னணி!

  • சென்னை: சென்னை செம்மஞ்சேரியில் அமைக்கப்பட இருந்த சர்வதேச விளையாட்டு நகரம் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளியஒஇ தவெக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கான காரணம் 2 நாட்களுக்கு பின் வெளியாகி இருக்கிறது. முதல்கட்ட திட்ட வடிவமைப்பு மிகப்பெரிய சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு போதுமானதாக இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    ஜேப்பியார் கல்வி குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 91.4 ஏக்கர் நிலம் திமுக ஆட்சி அமைந்த 4 மாதங்களில் கைப்பற்றப்பட்டது. ரூ.2,010 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன்பின் மொத்தமாக கைப்பற்றப்பட்ட இடத்துடன் சேர்த்து அரசு நிலத்தையும் சேர்த்து மொத்தமாக 112 ஏக்கரில் ரூ.206 கோடி மதிப்பில் விளையாட்டு நகரம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    Advertisement

    ஒலிம்பிக் மற்றும் சர்வதேச தரத்திலான விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையிலும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்கும் வகையிலும் விளையாட்டு அரங்குகள், பயிற்சி மையங்கள், வீரர்களுக்கு தங்குமிடம், துணை கட்டமைப்புகள் அடங்கியதாக இந்த விளையாட்டு நகரம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. குறிப்பாக நீர் விளையாட்டுக்கான கட்டமைப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டது.

    ஒரு கிமீ நீளமும், 13 மீட்டர் அகலமும் கொண்ட சர்வதேச தரத்திலான படகோட்டம் மற்றும் இதர நீர் விளையாட்டு தடம் அமைக்க திட்டங்கள் செய்யப்பட்டன. ஈசிஆர் சாலையில் அமைவதால், இது விளையாட்டு வீரர்களுக்கு ஏதுவான இடமாக பார்க்கப்பட்டது.ல் அதேபோல் சர்வதேச விளையாட்டு வீரர்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக விமான நிலையமும் அருகில் இருந்தது.

    Advertisement

    எதிர்காலத்தில் மெட்ரோ ரயில் இணைப்பு உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன் இந்த விளையாட்டு நகரத்தை இணைக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. அதற்கான முதல்கட்ட கட்டுமான பணிகளுக்காக ரூ.205.89 கோடி மதிப்பில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு நவம்பரில் அறிவிக்கப்பட்டது. அந்த பணி ஆணை ஆர்பிபி இன்ப்ரா ப்ராஜெட்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்த நிலையில் விளையாட்டு நகரத் திட்டம் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதன்பின் திடீரென பணி ஆணையை தவெக அரசு ரத்து செய்தது. இதற்கான எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தற்போது விளையாட்டு நகரத்தில் ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் போன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்த தேவையான அளவு விளையாட்டு நகரம் இருக்காது என்று மதிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இதனால் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டு பணி ஆணை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் மொத்தமாக 112 ஏக்கர் நிலத்தை முழுமையாக பயன்படுத்தி விளையாட்டு நகரத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English Summary

    Sports City: Chennai Sports City Tender Cancelled Over Design Limitations for International Events