உதயநிதி மூலம்தான் எல்லாம் மாறுச்சு! மனம் திறந்த தடகள வீராங்கனை வித்யா.. பதக்கம் வென்றது எப்படி?

  • சென்னை: சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் தொடர்ந்து நிலைநிறுத்தி வருபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை வித்யா ராம்ராஜ். களத்தில் அடுத்தடுத்துப் பல சாதனைகளையும் பதக்கங்களையும் குவித்து வரும் இவர், தனது இந்த அபார வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பின்னால் இருந்த ஆதரவு குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

    Advertisement

    குறிப்பாக, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்களும், விளையாட்டுத் துறைக்கு அவர் அளித்த அதீத முக்கியத்துவமும்தான் தங்களைப் போன்ற வீரர்களின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது என்று வித்யா ராம்ராஜ் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.

    Advertisement

    "உதயநிதி சார் வந்த பிறகு எல்லாமே மாறியது": வித்யா ராம்ராஜ்

    தடகளத்தில் தமிழ்நாடு எப்போதும் நல்ல நிலையில் இருந்தபோதிலும், முந்தைய திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகே வீரர்களுக்குக் கிடைத்த ஆதரவு பல மடங்கு உயர்ந்ததாக வித்யா ராம்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து சமீபத்தில் அவர் பேசுகையில்: "மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போது, தடகளத்தில் (Athletics) தேசிய அளவிலும், மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளிலும் நாம் எப்போதுமே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். ஆனால், எப்போது உதயநிதி சார் விளையாட்டுத் துறைக்கு வந்தாரோ, அப்போதிலிருந்து விளையாட்டுத் துறைக்குக் கிடைத்த ஆதரவு மிகப்பெரிய அளவில் அதிகரித்தது.

    Advertisement

    ஏனென்றால், அவர் வந்த பிறகு விளையாட்டுத் துறையில் ஒவ்வொன்றும் முன்னேறியது; எண்ணற்ற புதிய திட்டங்களைக் கொண்டு வந்தார். நான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றபோது எனக்குப் பல லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுகள் கிடைத்தன; கிட்டத்தட்ட ரூ.80 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு அவர்கள் விளையாட்டு வீரர்களை முழுமனதோடு ஆதரித்தார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    ஆண்டுக்கு ரூ.30 லட்சம்: எலைட் திட்டம் தந்த நிம்மதி

    விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் போட்டியிட வேண்டும் என்றால் உயர்தர காலணிகள், சத்தான உணவு, உடற்பயிற்சிக் கருவிகள் மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகள் அத்தியாவசியம். எளிய பின்புலத்தில் இருந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு இது மிகப்பெரிய சுமையாக இருந்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் தீவிரப்படுத்திய 'எலைட் திட்டம்' (Elite Scheme) தங்களுக்கு எவ்வாறு கைகொடுத்தது என்பதை வித்யா ராம்ராஜ் விளக்கியுள்ளார்:

    Advertisement

    ஆண்டுக்கு ரூ.30 லட்சம் உதவித்தொகை: எலைட் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட முன்னணி வீரர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் வரை அரசு சார்பில் பயிற்சி செலவுகளுக்காக வழங்கப்படுகிறது.

    30 நாட்களில் பணத்தைத் திரும்பப் பெறும் முறை: வித்யா ராம்ராஜ் குறிப்பிடுகையில், "இப்போது விளையாட்டுக்குத் தேவையான எந்தப் பொருளை வாங்கினாலும், அதற்கான ரசீதை (Bill) ஒரு வாரத்திற்குள் சமர்ப்பித்தால் போதும். அடுத்த 30 நாட்களுக்குள் அந்த முழுப் பணமும் எங்கள் வங்கிக் கணக்கிற்குத் திருப்பித் தரப்படுகிறது. இதனால் வீரர்களுக்குப் பணத் தட்டுப்பாடு என்ற பேச்சே இருப்பதில்லை" எனக் கூறியுள்ளார்.

    Advertisement

    பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களை எந்தவிதத் தயக்கமும் இன்றி வாங்க முடிகிறது என்பதும், பணப் பற்றாக்குறை குறித்த கவலைகள் ஏதுமின்றி போட்டிகளில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த முடிகிறது என்பதும் வீரர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

    "இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை"

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மூலம் செயல்படுத்தப்பட்ட இத்தகைய திட்டங்களை நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு வித்யா ராம்ராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார்:

    உதயநிதி சார் அந்த அளவிற்கு தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை உயர்த்தியுள்ளார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நமது தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் விளையாட்டு வீரர்களுக்கு இவ்வளவு சிறப்பான உதவிகளைச் செய்யும் திட்டங்கள் கிடையாது.

    Advertisement

    வீரர்களின் திறமைகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான நிதி, நவீன மைதானங்கள், விளையாட்டு அறிவியல் மையங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புகளை வழங்கி உதயநிதி ஸ்டாலின் அமைத்துக் கொடுத்த அந்த வலுவான அடித்தளமே, இன்று தமிழ்நாட்டு வீரர்கள் சர்வதேச மேடைகளில் தலைநிமிர்ந்து நிற்கக் காரணமாக அமைந்துள்ளது.

    விளையாட்டு வீரர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்குத் தேவையானதை உடனுக்குடன் செய்து கொடுத்ததால்தான் தங்களால் தடைகளைத் தாண்டி சாதனை படைக்க முடிந்தது என்பதை வித்யா ராம்ராஜின் இந்த நெகிழ்ச்சியான வார்த்தைகள் மெய்ப்பித்துள்ளன.

    English Summary

    "Sports in Tamil Nadu Changed After Udhayanidhi Sir Arrived": Athlete Vithya Ramraj Praises