வன்மநதியை உருவாக்கியதே மு.க.ஸ்டாலின்தான்! தாராபுரம் பதிலடி தரும்! - விஜய் சரமாரி விமர்சனம்

  • சென்னை: நேற்று தாராபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து அவர் கூறிய கருத்துக்கள் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஸ்டாலினின் பேச்சுக்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து அவர் தனது x பக்கத்தில், "தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின்.

    Advertisement

    நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

    தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

    ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

    பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.

    Advertisement

    தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    Stalin: DMK leader M.K. Stalin campaigned in Dharapuram yesterday. Remarks he made regarding TVK candidate Sathyabama have sparked a debate. Amidst this, Chief Minister Vijay has strongly condemned Stalin's comments.