ஸ்டாலின் மதுராந்தகத்தில் போட்ட 2 தூண்டில்: அன்புமணியை வளைக்கும் விஜய்... குறுக்கே விசிக

  • சென்னை: மதுராந்தகம் இடைத்தேர்தலில் பாமக வாக்குகள்தான் இப்போது துருப்புச்சீட்டாக மாறியுள்ள நிலையில், அதை தன் பக்கம் திருப்ப விஜய் காய்களை நகர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. அன்புமணியை நோக்கி தவெக தரப்பில் நடந்த இந்த நகர்வை தெரிந்துகொண்ட திமுக, உடனடியாக எடுத்த மூவ் என்ன தெரியுமா? விஜய்யின் இந்த முயற்சிக்கு அன்புமணி தரப்பில் கிடைத்த பதில் என்ன தெரியுமா? அதை பற்றின பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

    Advertisement

    இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திமுகவுக்கு டெபாசிட் போக வேண்டும் என்று தவெக சீனியர்களிடம் விஜய் கூறி வருவதாக தவெக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தவெக எடுத்த சர்வே

    ஆனால், சமீபத்திய சர்வேயில் திமுகவை விட தவெக 1.5 சதவீதம் மட்டுமே முன்னிலையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த வித்தியாசம் தொடர்ந்து நீடித்தால் அது திமுகவுக்கு சாதகமாக மாறலாம்.

    ஏனெனில் பாமகவின் வாக்குகள் யாருக்குப் போகும் என தெரியாத நிலையில் குறைந்த வித்தியாசம் என்பது வாக்குப் பதிவு நேரத்தில் எதிர்க் கட்சிக்கு சாதகமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் சந்தேகப்படுகிறாராம் முதல்வர் விஜய்.

    இதையடுத்துதான், பாமகவை தவெக பக்கம் கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொள்ளுமாறு தனது ஆலோசகர்களிடம் விஜய் வலியுறுத்தியதாக தெரிகிறது..

    Advertisement

    "நீங்கள் பாமகவை தவெகவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுங்கள். இது குறித்து உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி, பாமகவின் கட்சி வாக்குகள் எங்களுக்கு சாதகமாக மாறுவதற்கு உதவி செய்யுங்கள் என்று அன்புமணியிடம் விவாதியுங்கள்" என்று விஜய் ஆலோசகர்களிடம் கூறியதாக தவெக மேலிட வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    அன்புமணியை வளைக்கும் விஜய்

    இதனைத்தொடர்ந்து, அன்புமணியிடம் பேசப்பட்டுள்ளது. அவரும் இதற்கு சம்மதித்திருக்கிறார் என்றே தவெகவின் மேலிட தொடர்பாளர்களிடமிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

    இந்த சூழலில்தான், இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஷாக் ஆகியிருக்கிறது அறிவாலயம். உடனே மதுராந்தகத்தின் திமுக பொறுப்பாளர்களிடம் கள நிலவரம் குறித்து ஆராய்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், பாமகவின் வாக்குகளைக் கவர பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அதன்படி கடந்த 2 நாட்களாக களமாடி வருகிறார்கள் திமுகவினர்.

    Advertisement

    திருமாவளவனின் ஓட்டு வங்கி

    இது குறித்து தேர்தல் களத்தில் இருக்கும் திமுகவினரிடம் நாம் நேரடியாகவே விசாரித்தோம்.. அவர்கள் நம்மிடம் பேசும்போது, "பாமக மற்றும் வன்னியர் சமூகத்தின் வாக்குகள் தான் இப்போது துருப்பு சீட்டு. அதனை திமுக பக்கம் கொண்டு வர சில ரகசிய வழிகளில் அணுகி வருகிறோம்.

    அதாவது, பாமகவின் கிளைக்கழக நிர்வாகிகளிடம், "தவெகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகளுக்கு போடும் ஓட்டுக்கு சமம். இந்த தொகுதியில், தவெக ஜெயித்தால், எங்களால் தான் (பட்டியிலின வாக்குகள் + சிறுத்தைகளின் வாக்குகள்) தவெக ஜெயித்தது என விஜய்யிடம் க்ளைம் பண்ணுவார்கள்.

    Advertisement

    பாமக வாக்குகள் யாருக்கு

    விஜய்க்கு களத்தை ஆராயும் திறன் இல்லாததால் திருமாவளவன் சொல்வதை அப்படியே நம்புவார். இதனால், தவெக ஆட்சி அதிகாரத்தில் திருமாவின் கை ஓங்கும். அது எதிர்காலத்தில் பாமகவின் வளர்ச்சிக்கும் அரசியல் செயல்பாடுகளுக்கும் தடையாக இருக்கும். அதனால், உங்கள் தலைமையே (பாமக) தவெகவுக்கு ஓட்டுப்போட சொல்லி அட்வைஸ் செய்தால் கூட நீங்கள் போட்டு விடாதீர்கள். மதுராந்தகத்தில் தவெக ஜெயித்தால் அது திருமா ஜெயித்த மாதிரி. அதனால் யோசித்து முடிவு செய்யுங்கள்" என்று மிக அழுத்தமாக காய்களை நகர்த்தி வருகிறோம்.

    இதே பாணியை வன்னியர் சமூகத்திடமும், பட்டியலினத்தவர் அல்லாத பிற சமூகத்தினரிடமும் சொல்லி வாக்குகளை சீக்ரெட்டாக செய்து வருகிறோம். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது " என்று சீக்ரெட்டை நம்மிடம் உடைத்து சொல்கிறார்கள் திமுகவினர்..

    Advertisement

    இதனால் பாமக மற்றும் வன்னியர் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் தவெகவுக்கும் திமுகவுக்கும் பலத்த போட்டி மதுராந்தக தேர்தல் களத்தில் சூடு பிடித்துள்ளது.

    -நமது சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Stalin’s 2 Key Moves in Madurantakam.. Vijay Wooing Anbumani? VCK Enters the Picture