ஸ்டாலின் செய்த வரலாற்று தவறு.. விஜயபாஸ்கரை அன்றைக்கே கைது செய்திருந்தால்? நறுக்னு கேட்ட வல்லம் பஷீர்

  • சென்னை: "திருச்சியில் அன்பில் மகேஷின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் என்ன கைப்பற்றப்பட்டது? அதுகுறித்து எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. அன்பில் மகேஷுக்கும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இப்போது அவரை திடீரென கைது செய்திருப்பது ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்துக்கு இந்த அரசு ஆட்பட்டிருப்பதையே காட்டுகிறது" என்று கருத்து தெரிவித்துள்ளார் திராவிட வெற்றி கழகத்தின் முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர்..

    Advertisement

    தமிழ் நிறம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த தலைவர் வல்லம் பஷீர், "ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டத்துக்கு இந்த அரசு செயல்பட்டிருக்கிறது என்பதுதான் அன்பில் மகேஷ் கைது நடவடிக்கைக்கு பின்னால் இருக்கும் செய்தி. புதிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று அன்று பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்தபோதே அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிவைக்கப்பட்டார். குறிப்பாக, ஆர்எஸ்எஸ். நடவடிக்கைகளை விமர்சித்து "மத யானை" என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். அப்போதே பார்வை அவர் மீது திரும்பியது.

    Advertisement

    அன்பில் மகேஷ் கைது

    ஏற்கெனவே அரசகுமார் கைது செய்யப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாகியும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதைக் குறிப்பிட்டுத்தான் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. அரசகுமார் மீதான குற்றச்சாட்டுக்கே ஆதாரம் இல்லாத நிலையில், அவருக்குப் பின்னால் அன்பில் மகேஷ் இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? எனவே, இந்தக் கைது முழுக்க முழுக்கப் பழிவாங்கும் நடவடிக்கைதான்.

    கடந்த மாதம் திருச்சியில் அன்பில் மகேஷின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அந்தச் சோதனையில் என்ன கைப்பற்றப்பட்டது? அதுகுறித்து எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. அன்பில் மகேஷுக்கும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், திடீரென கைது செய்திருப்பது ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்துக்கு இந்த அரசு ஆட்பட்டிருப்பதையே காட்டுகிறது.

    Advertisement

    கடந்த ஒரு வாரமாகப் பள்ளிக்கல்வித் துறை மீது ரூ.600 கோடிக்கும் மேலான ஊழல் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும்போது ஏற்கெனவே சிறப்பாக செயல்பட்ட பள்ளிக்கல்வித் துறை மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது ஏன்?

    உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை

    உதயநிதி ஸ்டாலின் சொன்னதை போல, இந்த அரசு கவனத்தைத் திசைதிருப்பும் அரசாக செயல்படுகிறது. எந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், அரசின் கவனத்தையும் மக்களின் கவனத்தையும் எந்தப் பக்கம் திருப்ப வேண்டும் என்பதில் இந்த அரசு தெளிவாகச் செயல்படுகிறது.

    முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அன்பில் மகேஷ் விவகாரத்தில் ஆளுநரின் அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

    Advertisement

    ஆனால், இதுதான் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை என்பதைப் போலப் பாராட்டுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இதற்கு முன்பும் பல அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைக்கும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

    விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி

    இந்த அரசு கைது செய்ய முடியும் என்று கூறினால், கடந்த காலத்தில் திமுக அரசு ஏன் விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி போன்றவர்களைக் கைது செய்யவில்லை? விஜயபாஸ்கர் மீது கொரோனா காலத்தில் பிபி கிட் வாங்கியதிலும், ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்திலும், முகக்கவசம் இறக்குமதி செய்ததிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கண்டக்டர், டிரைவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அவர்களை இன்றைய அரசு கைது செய்யவில்லை.

    Advertisement

    ஸ்டாலின் செய்த தவறு

    அன்றைக்கே திமுக அரசு, விஜயபாஸ்கரைச் சிறையில் அடைத்திருந்தால், எஸ்.பி. வேலுமணியைக் கைது செய்திருந்தால், இன்றைக்கு இந்தப் பிரச்சினைகள் எழுந்திருக்காது. செங்கோட்டையனைக் கைது செய்திருந்தால், அவர் இன்றைக்கு அமைச்சராக இருந்திருக்க மாட்டார்.

    அப்போது திமுக அரசு எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறது என்பதைப் பாருங்கள். அவர்கள் மீதெல்லாம் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காமல் விட்டது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை, மிகப்பெரிய தவறு. நாகரிகமான அரசியலைக் கடைப்பிடிக்கிறோம் என்று கூறிக்கொண்டு, அப்போது நடவடிக்கை எடுக்காமல் விட்டார்கள்" என்றெல்லாம் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Stalin’s Historic Mistake: What If Vijayabaskar Had Been Arrested Then? Vallam Basheer Attacks DMK