சென்னை: "சென்னை கொளத்தூரில் பார்த்து பார்த்து செய்த ஸ்டாலினை தோற்கடிப்பீர்கள் என்றால், மக்களுக்கு வேறு என்ன செய்து தர வேண்டும்? ஆர்எஸ் பாரதி போலவே, சேகர் பாபு போலவோ வாக்காளர்களை திட்டுவதோ அல்லது மற்ற கட்சிகளை விமர்சிப்பதோ எனது நோக்கம் கிடையாது. கொளத்தூர் பொதுமக்களிடம் எனது கேள்வி என்னவென்றால், ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு இப்படி ஒரு தண்டனையைக் கொடுக்க அவர் என்ன தவறு செய்தார்?" என்று நறுக்னெ கேட்டுள்ளார் அரசியல் விமர்சகர கோடீஸ்வரன்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான கோடீஸ்வரன் கடுமையான கேள்விகளையும் ஆதங்கத்தையும் தமிழ்க்குரல் சேனல் பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போது அவர் பேசும்போது, "கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மு.க.ஸ்டாலின் தோற்பதற்கு என்ன தவறு செய்தார்? எனக்குத் தெரிந்து அவர் எந்த தவறும் செய்யவில்லை. அந்தத் தொகுதியைச் சென்று பார்க்கும்போது திமுகவின் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும், அவர்கள் செய்த சாதனைகள் மீது எனக்கு மதிப்பும் உண்டு. தோற்கும் அளவுக்கு கொளத்தூரில் சட்டமன்ற உறுப்பினராக அவர் என்ன தவறு செய்தார்? அதிகமான பூங்காக்களை கட்டித் தந்தது, அதிகமான விளையாட்டு மைதானங்கள், பொது நூலகங்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்குவதற்கான இடங்கள் இவ்வளவும் அமைத்துக் கொடுத்ததுதான் அவர் செய்த தவறா? அங்கு அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷனரை பார்த்தால் அது ஏதோ பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகம் போல காட்சியளிக்கிறது. அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பார்த்தால் ஒரு பெரிய மருத்துவமனை போல இருக்கிறது. இவ்வளவு வசதிகளையும் பார்த்து பார்த்து செய்த ஒருவரை தோற்கடிப்பீர்கள் என்றால், மக்களுக்கு வேறு என்ன செய்து தர வேண்டும்? ஆர்எஸ் பாரதி போலவே, சேகர் பாபு போலவோ வாக்காளர்களை திட்டுவதோ அல்லது மற்ற கட்சிகளை விமர்சிப்பதோ எனது நோக்கம் கிடையாது. கொளத்தூர் பொதுமக்களிடம் எனது கேள்வி என்னவென்றால், ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு இப்படி ஒரு தண்டனையைக் கொடுக்க அவர் என்ன தவறு செய்தார்? யாரை வேண்டுமானாலும் தண்டிக்கலாம், ஆனால் நீங்கள் கொடுத்த இந்தத் தண்டனை நியாயமானதா? தொகுதிக்கு நீண்ட நாட்களாகக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றோ, அல்லது வீடு கட்டும்போது உள்ளூர் கவுன்சிலர் பணம் கேட்டுக் கெடுபிடி செய்தார் என்றோ சிலர் சொல்லலாம். கவுன்சிலர் அப்பட செய்திருந்தால் அதுக்கு கவுன்சிலரை தோற்கடிப்பீர்களா அல்லது கட்சியின் தலைவரையே தோற்கடிப்பீர்களா? இதுதான் உங்களின் தராசு என்றால், இனிமேல் தமிழக வெற்றிக் கழகத்தில் ஜெயித்து கவுன்சிலர்கள் வருவார்கள். அப்படியென்றால் இதே தராசை நாளைக்கு விஜய்க்கும் பயன்படுத்துவீர்களா? வாக்காளர்களிடம் நான் அதையே கேட்கிறேன். இதே தராசை அன்றும் பயன்படுத்துவீர்களா? திமுக செய்தது தவறு என்றால், இன்றைக்குத் தவெக செய்யும் குதிரை பேர அரசியல் சரியா? உங்களின் நியாயமான தராசில் இதற்கு என்ன மதிப்பெண் போடுவீர்கள்? ஆட்சியை தந்தால் மீனவ கிராமங்களை அழித்துத் தலைமை செயலகம் கட்டுவதா? ரூ. 5.5 கோடியில் முதலமைச்சர் அலுவலக அறையைப் பெரிதாக்குவது.. உடனே அது 10X10க்கு அறை மட்டுமே என்று ஒரு அமைச்சர் பச்சையாக பொய் சொல்கிறார்.. தமிழ்நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு இருக்கும்போது, நிர்மல் குமார் மின்சாரத் தட்டுப்பாடே இல்லை என்று கூறுகிறார். அதனால், அன்பார்ந்த வாக்காளர்கள் தங்கள் தராசு சரியாக இருக்கிறதா என்று சிந்திக்கப் போகிறீர்களா அல்லது வாக்களிக்கப் போகிறீர்களா என்பதை முடிவு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஊழல் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. தாம்பரம் தொகுதியில் ஏற்கனவே இரண்டு சிற்பங்கள் வைத்து கட்டப்பட்ட பணிக்கு மீண்டும் டெண்டர் விடப்பட்டு 45 லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது... அதனால், தராசு சரியாக இருக்கிறதா என்று சிந்திக்கப் போகிறீர்களா அல்லது சந்தோஷமாக வாக்களிக்கப் போகிறீர்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் வாக்காளர்களே" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.ஸ்டாலின் செய்த தவறு என்ன
கொளத்தூரில் தலைவரையே தோற்கடிப்பீங்களா
தவெக குதிரை பேர அரசியல் சரியா?
தாம்பரம் தொகுதி - 45 லட்சம் ஊழல்