கண்ணசைத்த ஸ்டாலின்.. விஜய்யையும் பாஜகவையும் சந்திக்க மாட்டோம்! அய்யநாதன் சொன்ன பகீர் காரணம்

  • சென்னை: "ஸ்டாலின் ஆட்சியில் இருந்த அதே காவல் துறையும், அதே அதிகாரிகளும்தான் இப்போதும் இருக்கிறார்கள். அப்படியிருக்க, ஸ்டாலின் ஆட்சியில் நன்றாக இருந்த சட்டம் ஒழுங்கு இப்போது ஏன் சீர்கெட்டுப் போயுள்ளது? இதற்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்?

    Advertisement

    Marshal Media சேனலுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், "நான் முந்தைய சந்திப்புகளின்போதே திமுக தலைவர் ஸ்டாலினிடம் தெளிவாக எடுத்துரைத்தேன். இவிஎம் (EVM) செயல்பாட்டில் இருக்கின்ற வரை, வெற்றி தோல்சியை மத்திய அரசில் இருப்பவர்கள்தான் நிர்ணயிப்பார்கள். அது பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, யாருடைய ஆட்சியாக இருந்தாலும் அவர்கள்தான் அதைத் தீர்மானிப்பார்கள். இந்த முறையை ஒழித்தால் மட்டுமே உண்மையான தேர்தல் முடிவு கிடைக்கும் என்ற எனது வாதத்தை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

    Advertisement

    ஸ்டாலின் சோர்வடையவில்லை

    இவிஎம் முறையை எதிர்த்து திமுக எங்களுடைய ஆதரவுடன் செயல்பட முன்வந்துள்ளது. இப்போது ஸ்டாலினை சந்தித்து பேசியது போல, எடப்பாடி பழனிசாமி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பலரையும் சந்திக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆனால், விஜய்யையும் பாஜகவையும் நாங்கள் சந்திக்கப் போவதில்லை.. காரணம், அவர்கள் இதன் பயனாளிகளாகவும் இயக்குபவர்களாகவும் இருக்கிறார்கள்.

    இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு ஓட்டுகளை மாற்றலாம் என்பதை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரான ஐயா பொன்ராஜ், ஸ்டாலினிடம் விரிவாக எடுத்துரைத்தார். அதனையும் ஸ்டாலின் மிகவும் கவனமாகக் கேட்டறிந்தார்.

    Advertisement

    விஜய் தரப்பு எதிர்பார்த்ததை விட அதிகமான இடங்களை பெற்றது குறித்து அவர் என்னிடம் சிரித்துக்கொண்டே ஜாலியாக பேசினாரே தவிர, தோல்வியால் ஸ்டாலின் சோர்வடையவில்லை.

    100 நாள் ஆட்சி சாதனை என்ன

    விஜய் மற்றும் அவரது கட்சியின் செயல்பாடுகளை நாம் கடுமையான கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 100 நாள் ஆட்சி நடந்து முடிந்துள்ளது என்று அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், இந்த 100 நாட்களில் எவ்வளவு கொலைகள் நடந்துள்ளன? பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் எந்தளவுக்கு அதிகரித்துள்ளன?

    முந்தைய ஆட்சியில் இருந்த அதே காவல் துறையும், அதே அதிகாரிகளும்தான் இப்போதும் இருக்கிறார்கள். அப்படியிருக்க, ஸ்டாலின் ஆட்சியில் நன்றாக இருந்த சட்டம் ஒழுங்கு இப்போது ஏன் சீர்கெட்டுப் போயுள்ளது? இதற்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்?

    Advertisement

    விஜய் ஆட்சியின் முறைகேடுகள்

    மின்சாரக் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது, சொத்து வரிகள் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பல மடங்கு ஏவப்பட்டுள்ளன.. பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன, பால் பாக்கெட்டுகளின் அளவும் தரமும் குறைந்துள்ளன. விசாரணை கைதிகள் அடுத்தடுத்து உயிரிழக்கிறார்கள். இவை அனைத்தும் விஜய் ஆட்சியின் கீழ் நடக்கும் முறைகேடுகளுக்கு சாட்சியாகும்.

    ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக சொல்லும் இவர்கள், வெறும் ஒரு லட்சம் ரூபாய் மூலதனம் கொண்ட நிறுவனங்கள் மூலம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

    தமிழ்நாடு அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக சொல்கிறார்கள்.. அதில் முதலீடு செய்யும் ஒரு நிறுவனத்தின் பெய்ட்-அப் கேப்பிடல் வெறும் ஒரு லட்சம் ரூபாயாக உள்ளது. 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாகக் கூறும் ஒரு நிறுவனம் எப்படி ஒரு லட்சம் ரூபாய் மூலதனத்தைக் கொண்டு செயல்படும் இந்தத் தரவுகள் மற்றும் முதலீட்டு விழாக்கள் குறித்த வெளிப்படைத்தன்மை இல்லை..

    Advertisement

    எந்த பிரச்சனையை இதுவரை தீர்த்தார்கள்?

    காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை, ஈழத் தமிழர் விஷயம், மீனவர் பிரச்சினை எனத் தமிழ்நாட்டின் எந்தவொரு முக்கிய மக்கள் பிரச்சினைகளிலும் விஜய் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான நிலைப்பாட்டையும் எடுத்ததில்லை.

    களத்தில் நின்று போராடாத விஜய்யுடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற இயக்கங்கள் இணைவது எந்த வகையில் தமிழ் தேசியத்தை உயர்த்தப் போகிறது? விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், உளுந்தூர்பேட்டை மாநாட்டில் த.வெ.க-வுடன் இணைந்து பயணிப்போம் என்று அறிவித்துள்ளார்.. இது தமிழ் தேசிய எழுச்சி மாநாடு என்று சொல்லப்பட்டாலும், கொள்கை ரீதியாக விஜய்க்கும் தமிழ் தேசத்திற்கும் என்ன சம்பந்தம்?

    Advertisement

    கரூர் சம்பவம் நடந்து ஒரு வருடதாகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதையெல்லாம் தட்டிக்க கேட்காமல் மவுனம் காப்பது யார் யாரைக் காப்பாற்றுவதற்காக?" என்றெல்லாம் நறுக்கென கேட்டுள்ளார் அய்யநாதன்.

    English Summary

    Stalin Sends a Signal.. We Won’t Meet Vijay or BJP! Ayyanathan Reveals the Shocking Reason Behind the Decision