ஸ்டாலினை சுற்றும் சந்தேகங்கள்! பாஜக, திமுக கூட்டணி? அந்த மாநாட்டில் கனிமொழி கூட இல்லை, கவனிச்சீங்களா

  • சென்னை: பாஜகவுடன் திமுக சேரப்போகிறது, மோடி அமைச்சரவையில் திமுக என்றெல்லாம் மூத்த முன்னணி ஊடகங்கள் செய்திகள் எழுதுகிறார்கள்.. ஆனால் ஏன் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அமைதியாக இருப்பது ஏன்? திமுக - அதிமுக கூட்டணி என்ற செய்தி அன்று வந்ததுமே, காலையில் 6.30 மணிக்கெல்லாம் அதை மறுத்து ஸ்டேட்மென்ட் விட்டார் ஸ்டாலின். ஆனால் பாஜகவுடன் கூட்டணி என்ற செய்திக்கு அமைதியாக உள்ளாரே ஏன்?" என்று மூத்த பத்திரிகையாளர் மணி தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    Advertisement

    ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "சட்டமன்றத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, மத்திய உள்துறை அமைச்சரின் கூட்டத்தில் கலந்துகொள்ளும்போது நிலைமாறுவது தவெகவுக்கு முரண்பாடானது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.. ஆனால் இதை தவெகதான் தெளிவுபடுதத வேண்டும்.

    Advertisement

    பாஜகவுடன் திமுக கூட்டணி?

    அதேபோல பாஜகவுடன் திமுக கூட்டணி சேரப்போவதாக செய்திகள் வருகின்றன.. அதுக்காக திமுக மற்றும் தவெக இரண்டையும் ஒப்பிடக் கூடாது.ஒரே தட்டில் வைத்துப் பேசவும் கூடாது.. திமுக என்பது எம்.பி.க்களுடன் நீண்ட காலமாக இயங்கிவரும் ஒரு தீவிரமான அரசியல் கட்சி, தவெக என்பது குழந்தை போல.. அது புதிய கட்சி.. எனவே, இரண்டையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். திமுக பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வருவது சீரியஸான விஷயம்.

    இதற்கு திமுகவிடமிருந்து முறையான மறுப்பு இதுவரை வரவில்லை.. பாஜகவுடன் திமுக கூட்டணி சேரப்போவதாக முன்னணி ஊடகங்களில் செய்திகள் வந்தாலும், வழக்கம்போல கடுமையான கண்டனங்களையோ அல்லது உடனடியாக மறுப்பு அறிக்கைகளையோ திமுக தலைவர்கள் வெளியிடாமல் மவுனம் காப்பது ஏன்?

    Advertisement

    ஸ்டாலினின் அமைதி ஏன்

    வழக்கமாக இதுபோன்ற செய்திகள் வந்தால் காலையிலேயே அறிக்கை விடுவது, கண்டனம் தெரிவிப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கும் திமுக, இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது ஏன்?

    டெல்லியில் நடைபெற்ற "அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்" மாநாட்டில் திமுகவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லையே ஏன்? பாஜக எதிர்ப்பில் முன்னணியில் நின்ற திமுகஇப்போது தற்போது இதுபோன்று விலகி நிற்பது சந்தேகத்தை கிளப்புகிறது.

    மாநாட்டில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் என குடும்பத்தில் யாருமே கேலந்து கொள்ளவில்லையே.. கடந்த காலங்களில் மோடி எதிர்ப்பிலும், பாசிச எதிர்ப்பிலும் எப்போதும் முன்னணியில் நிற்கும் திமுக, இந்த மாநாட்டில் முற்றிலுமாக விலகி நிற்கிறதே.

    Advertisement

    கையெழுத்து இயக்கம்

    அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்புக் கருதி கட்சிகள் தங்களின் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளும் போக்கு குறித்து நாம் சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தில் 1999-ம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்குக் கருணாநிதி ஆதரவு அளித்தார். மதவெறிக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்திவிட்டுப் பிறகு பாஜகவுடன் இணைந்தனர். அரசியல் சூழலுக்கு ஏற்ப கட்சிகள் தங்களின் நிலைப்பாடுகளை மாற்றுவது புதிதல்ல.

    தொடர்ந்து முன்னணி ஊடகங்கள் அமைச்சரவையில் திமுக சேரப்போகுது, மோடி அமைச்சரவையில் திமுக என்றெல்லாம் எழுதுகிறார்கள்.. ஆனால் ஏன் ஸ்டாலின் அமைதியா இருக்காரு? திமுக - அண்ணா திமுக கூட்டணி என்ற செய்தி அன்று வந்ததுமே, காலைல 6.30 மணிக்கு ஸ்டேட்மென்ட் விட்டாரு ஸ்டாலின். ஆனால் இப்போது அமைதியாக உள்ளாரே ஏன்?

    Advertisement

    திமுகவின் திடீர் மாற்றம்

    முன்பெல்லாம் தங்களை பற்றி இதுபோன்ற செய்திகள் வந்தால், காலையிலேயே உடனடியாகத் துள்ளிக்குதித்து அறிக்கை விடுவதும், சம்பந்தப்பட்ட ஊடகங்களையும் செய்தியாளர்களையும் கடுமையாக விமர்சிப்பதும் திமுகவின் வழக்கம். ஆனால், 2 நாளாகத் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருந்தும் திமுக தரப்பிலிருந்து எந்தவிதமான மறுப்பும் வராமல் அமைதியாக உள்ளனர்.

    அதிகாரப்பூர்வமாக திமுகவின் பொதுச்செயலாளரோ அல்லது தலைவரோதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். வரக்கூடிய செய்திகள் அனைத்தும் தவறானவை, முற்றிலும் உள்நோக்கம் கொண்டவை, கடுமையாக கண்டிக்கத்தக்கவை என்று திமுக இந்நேரம் அறிக்கை விட்டிருக்க வேண்டும்.

    திமுக எப்போதும் பதவி இல்லாமல் இருந்ததில்லை.. ஒன்று ஆட்சியில் இங்கு இருப்பார்கள் அல்லது மத்தியில் செல்வாக்குடன் இருப்பார்கள்.. மோடி அரசு தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து கொண்டு, பாதுகாப்பை தேடி திமுக பாஜகவிடம் சரணடைவார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Stalin Silence Raises Questions.. DMK BJP Alliance? Kanimozhi Was Also Missing From That Key Delhi Conference