சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக்

  • சென்னை: திமுகவுக்கு இது சோதனை காலம். தேர்தலில் தோல்வியடைந்தாலும் திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகும் முயற்சி செய்தார். தவெக அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை. அதிமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக செல்போனில் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் இணைவதை தடுத்து, திமுகவில் இணைவதற்கு அவர் பெரிய ஆபர் வழங்குவதாக உறுதியளித்துள்ளாராம்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தேர்தலுக்கு பிறகு அதிமுக கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடி தூக்கினார்கள். வேலுமணி உள்ளிட்ட சில முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியிடம் சரண்டரானாலும் பல முன்னாள் அமைச்சர்கள் அப்செட்டில் தான் இருக்கிறார்கள்.

    Advertisement

    திமுக சைலன்ட் கில்லர்

    பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகளின் எம்எல்ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட சில நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். அண்ணாமலை கட்சியிலும் பல அதிமுக நிர்வாகிகள் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    தீர்ந்துபோன கட்சியிடம் இருந்து நிர்வாகிகளை பேரம் பேசி வாங்குமளவுக்கு தவெக காய்ந்து போயுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். தவெக மற்ற கட்சி நிர்வாகிகளை பர்சேஸ் செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் விமர்சனம் செய்திருந்தார். மறுபக்கம் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளை திமுக சைலன்டாக காய் நகர்த்துகிறதாம்.

    Advertisement

    களமிறங்கிய ஸ்டாலின்

    இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், "தவெக ஆட்சியை பிடித்தாலும் கட்சி கட்டமைப்பு இல்லை. அதை சரி செய்வதற்காக தான் அதிமுக நிர்வாகிகளை இணைத்து வருகிறார்கள். தவெக கள அரசியலில் பலமாவது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். ஏற்கனவே திமுக அமைச்சரவையில் இருந்த பலர் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், அன்வர்ராஜா, மனோஜ் பாண்டியன் போன்ற மூத்த நிர்வாகிகளை திமுக தங்கள் பக்கம் இழுத்தது.

    அதிமுகவில் நிலவும் பிரச்சனை தற்போதைக்கு முடியாது. இதனால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களை திமுகவில் இழுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எங்கள் தலைவர் ஸ்டாலினே நேரடியாக அதிமுக அதிருப்தி நிர்வாகிகளிடம் பேசி வருகிறார். உங்களுக்கு கட்சி மாறும் எண்ணம் இருந்தால் திமுகவில் இணையுங்கள். உங்களுக்கு நிச்சயமாக உரிய மரியாதை, அங்கீகாரம் வழங்கப்படும்' என்று பேசி வருகிறார்.

    Advertisement

    அதிமுகவினர் குழப்பம்

    அதிமுகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் பட்டியல் ஸ்டாலினிடம் சென்றுள்ளது. அந்த பட்டியலை வைத்து தான் அவர் பேசி வருகிறாராம். பெஞ்சமிடமே ஸ்டாலின் நேரடியாக பேசி தான் திமுகவில் இணைத்துள்ளார். வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்களிடம் பேசி அவர்களை திமுகவில் இணைய வைக்க முயற்சிகள் நடக்கின்றன. அதிமுகவினர் தவெகவில் இணைவதை தடுப்பதுதான் முக்கிய திட்டம்.

    நீங்கள் தவெகவில் இணைந்து என்ன பயன். உங்களால் அந்தக் கட்சியின் தலைவரை கூட பார்க்க முடியாது. நிலைமை சரியாகிவிடும். எனவே அதிமுகவிலேயே தொடருங்கள். கட்சி மாறும் நிலையில் உறுதியாக இருந்தால் திமுகவை தேர்வு செய்யுங்கள். மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அழுத்தமாக சொல்கிறார். இதனால் அதிமுக மாஜிக்கள் என்ன செய்வதென்று அறியாமல் ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்கள்" என்றனர்.

    English Summary

    Tamilnadu Politics changed after election. DMK leader Stalin turned silent killer. ADMK members gave big offer by Stalin. TVK In deep trouble now.