பெரியார் அறிவுலகத்தை போல்.. திருச்சி, நெல்லையில் நூலக பணிகளை முடிக்கணும்.. ஸ்டாலின் வைத்த வேண்டுகோள்

  • கோவை: பெண்கள், இளைஞர்கள் என்று அனைத்து தரப்பினரும் பெரியார் அறிவுலகத்தை பார்வையிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். திமுக ஆட்சியின் கனவு திட்டம் பெரியார் அறிவுலகம் என்று கூறிய ஸ்டாலின், இந்த நூலக பணியை பாதியில் நிறுத்தி இருந்தால் தவெக அரசு மூடுவிழா நடத்தி இருக்கும் என்றும் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    கோவை அவிநாசி சாலை நீலாம்பூர் பகுதியில் கோவை மாவட்ட திமுக அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்காக திமுக தலைவர் ஸ்டாலின் கோவை வந்தார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து காலை 11 மணியளவில் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    Advertisement

    இதன்பின் கடந்த மாதம் கோவையில் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்டார். அப்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உடனிருந்தார். திமுக ஆட்சியின் போதே பெரியார் அறிவுலகப் பணிகள் 99% நிறைவடைந்த சூழலில், ஆட்சி மாற்றம் நடைபெற்றது. இதனால் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திராவிட மாடல் அரசின் கனவு திட்டமான தந்தை பெரியார் பெயரில் அமைந்துள்ள அறிவுலகத்தை பார்க்க கூடிய நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பார்த்திருந்தாலும், தற்போது முழுமை அடைந்த பின் நானும், ஆசிரியர் கி.வீரமணியும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

    Advertisement

    அதிக கூட்டம் இருந்த காரணத்தால் முழுமையாக பார்க்க முடியவில்லை. அதனால் இன்னொரு முறை பெரியார் அறிவுலகத்தை பார்வையிடும் ஆசை வந்துள்ளது. தமிழ்நாடு போய் கொண்டிருக்கும் சூழலில், திராவிட இயக்கம், திராவிடம், பெரியாரின் லட்சியங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள பெரியார் அறிவுலகத்தை இளைஞர்கள், மாணவர்கள் பார்வையிட வேண்டும்.

    கி.வீரமணியை ஸ்டாலின் கண்டிக்கணும்.. இந்து மதத்தை கேலி செய்தால் திமுகவே இருக்காது: வானதி சீனிவாசன்

    ஏற்கனவே சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நெல்லையில் காயிதே மில்லத் பெயரிலும், திருச்சியில் காமராசர் பெயரில் நூலகம் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்திருக்கிறது. இந்த நூலகத்தை பொறுத்தவரை 99% பணிகள் முடிவடைந்துவிட்டது. ஒருவேளை பாதியோடு இருந்திருந்தால், தவெக ஆட்சியில் மூடுவிழா நடத்தி இருப்பார்கள்.

    Advertisement

    நல்லவேளை தப்பித்துள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் நூலகம் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நெல்லை மற்றும் திருச்சியில் நூலக கட்டுமான பணிகள் நிதானமாகவே நடந்து வருகிறது. நூலகம் மட்டுமல்லாமல் டைடல் பார்க் மற்றும் மினி டைடல் பார்க் கட்டுமான பணிகளும் ஆமை வேகத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Stalin Urges Women and Youth to Visit 'Periyar Arivulagam', Calls It DMK Dream Project