ஸ்டாலின், விஜய், எடப்பாடி நேரில் பிரதமரை சந்திக்க திட்டம்? பிளானை சொதப்பியது யார்? தராசு ஷ்யாம் நச்

  • சென்னை: எம்.ஜி.ஆருக்கு கிராமப்புறங்களில் மிகப்பெரிய ஆதரவு இருந்தது. ஆனால் விஜய்க்கு நகரங்களில் ஓரளவு தாக்கம் இருந்தாலும், கிராமப் பகுதிகளில் அந்த அளவிற்கு வரவேற்பு இல்லை. அதேபோல ஜெயலலிதாவிற்கு இருந்த அபரிமிதமான பெண்களின் ஆதரவு வாக்கு வங்கியுடன், விஜய்யின் ஆதரவை ஒப்பிடவே முடியாது" என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து கூறியிருக்கிறார்.

    Advertisement

    News focus Tamil சேனலுக்கு பேட்டி தந்துள்ள தராசு ஷ்யாம், "தவெக வேட்பாளர்களின் லிஸ்ட்டை ஆய்வு செய்து பார்த்தால், சுமார் 160 முதல் 170 பேர் பிற கட்சிகளிலிருந்து, குறிப்பாக அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான்.. தேர்தலில் வெற்றி பெற்றவர்களிலும் பாதிக்கும் மேற்பட்டோர் அதிமுக பின்னணி கொண்டவர்களே. அதனால்தான் அவர்கள் எம்ஜிஆரின் பெயரைத் தொடர்ந்து குறிப்பிடுகிறார்கள்.

    Advertisement

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர், மு.க.ஸ்டாலின்

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர், மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களுக்கு என்று தனியாக வலுவான வாக்கு வங்கி இருந்தது. அந்த வரிசையில் வைத்துப் பார்க்கும்போது, விஜய்க்கான தனிப்பட்ட வாக்கு வங்கி என்பது மிகவும் பின் தங்கியே உள்ளது.

    எம்.ஜி.ஆருக்கு கிராமப்புறங்களில் மிகப்பெரிய ஆதரவு இருந்தது. ஆனால் விஜய்க்கு நகரங்களில் ஓரளவு தாக்கம் இருந்தாலும், கிராமப் பகுதிகளில் அந்த அளவிற்கு வரவேற்பு இல்லை. அதேபோல ஜெயலலிதாவிற்கு இருந்த பெண்களின் ஆதரவு வாக்கு வங்கியுடன் விஜய்யின் ஆதரவை ஒப்பிட முடியாது.. ஆனால் தவெகவினர் அதற்கு மேல் உரிமை கோருகிறார்கள்.

    Advertisement

    விஜய்க்கு ஆதரவு குறைவு

    Gen Z தலைமுறை இளைஞர்கள் மற்றும் பெண்கள் விஜய்க்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுவதையும் பொதுமைப்படுத்த முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைஞர்கள் குறிப்பிட்ட தலைவர்களை ஆதரிப்பது வழக்கம் தான். அவர்கள் வயது முதிர்ச்சி அடையும்போதும், வாழ்க்கைப் அனுபவங்கள் மற்றும் விலைவாசி போன்ற நிஜ உலகப் பிரச்சனைகளை எதிர்நோக்கும்போதும் அவர்களின் அரசியல் பார்வை நிச்சயம் மாற்றம் அடையும்.

    ஜெயலலிதா கொண்டுவந்த இலவச கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமடைந்தது. குறிப்பாக புதிதாக திருமணமான இளம்பெண்களுக்கு அது ஒரு நிலையான வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் அளித்தது. 2006-2011 காலகட்டத்தில் கலைஞர் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தபோதிலும், 2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற பெண்களின் இந்த ஆதரவே முக்கியக் காரணமாக இருந்தது.

    Advertisement

    வெற்றி மடிக்கணினி

    தற்போது அறிவிக்கப்படும் திட்டங்களைக் கவனிக்கையில், ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இலவச லேப்டாப் போன்ற திட்டங்களுக்கு "வெற்றி மடிக்கணினி" என வெறும் பெயரை மட்டுமே மாற்றி அறிவிக்கிறார்கள். 1967 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக நலத் திட்டங்களைத் தாண்டி புதிதாக யோசிப்பதற்கு அவர்களிடம் AI மட்டுமே உள்ளது.

    தமிழகத்தில் ஏற்கனவே இலவச சைக்கிள் போன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், புதிதாக சைக்கிளுடன் ஹெல்மெட், குடிநீர் பாட்டில் சேர்த்து வழங்கிவிட்டு அதற்குத் தவெக தரப்பில் "வெற்றி சைக்கிள்", "'வெற்றி ஹெல்மெட்" எனப் பெயர் மாற்றுவது வேடிக்கையாக உள்ளது.

    Advertisement

    விஜய், எடப்பாடி, ஸ்டாலின்

    கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் எனப் பெயர் வைத்திருப்பதால், பிற மாநிலங்களில் கட்சி தொடங்கும்போது சிக்கல் ஏற்படும். புதுச்சேரியில் தோல்வி அடைந்ததையும், கேரளா போன்ற பிற மாநிலங்களுக்குச் செல்லும்போது இந்தப் பெயர் பொருத்தமாக இருக்காது.

    தேர்தல் காலத்தில் கட்சிகளுக்கு இடையே கசப்புணர்வுகளும் போட்டிகளும் இருப்பது இயல்புதான். இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பிரச்சனைகள் வரும்போது அரசியல் தலைவர்கள் அனைவரும் இணைந்துதான் குரல் கொடுக்க வேண்டும்.

    "விஜய், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் மற்றும் காவிரிப் பிரச்சனை சார்ந்த விவசாயச் சங்கத் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, பிரதமரிடம் நேரம் வாங்கிச் சென்று அழுத்தம் கொடுத்திருந்தால் அது எவ்வளவு பெரிய செய்தியாக மாறியிருக்கும்! அதுதான் உண்மையான அரசியல் பொலிட்டிக்கல் இமேஜினேஷன்.. அதைச் செய்யவிடாமல் தடுத்தது யார் என்பது புரியவில்லை.

    Advertisement

    விஜய்க்கு வழிகாட்டுதல் இல்லை

    காவிரி பிரச்சனையில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவையான சூழலில், அரசியல் ரீதியாக உதயநிதி பேசியது, அவரது கைது மற்றும் விடுதலை போன்ற சம்பவங்கள் நடந்ததே தவிர, கர்நாடகாவில் மழை நின்றால் காவிரியில் தண்ணீர் வருமா என்ற முக்கியக் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

    விஜய்யின் பின்னால் இருந்து வழிகாட்டும் சிலருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றே நினைக்கிறேன். அவர்களின் தவறான வழிகாட்டுதலினால்தான் தவெகவின் அரசியல் பயணத்தில் பல தடங்கல்கள் ஏற்படுகின்றன" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Stalin, Vijay, Edappadi Planned to Meet PM Modi? Who Stopped the Big Political Move?