ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா

  • சென்னை: திமுகவின் எதிர்கால அரசியல் வியூகம் மற்றும் கூட்டணிக் கணக்குகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.. திருமாவளவன் மற்றும் விசிக உடனான உறவு, திமுகவில் சிறுபான்மையினரின் பங்கு மற்றும் சபரீசன் விவகாரம் என பல அதிரடி தகவல்களை அவர் முன்வைத்துள்ளார்.. குறிப்பாக திமுகவின் புதிய வியூகம், சிறுபான்மையினரை பலப்படுத்துவது எப்படி? என்பது குறித்து விவரித்துள்ளார்.. அவைகளை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "இப்போது திருமாவளவன் கிட்ட இருந்த வாக்காளர்கள் நிறைய பேர், விஜய் பக்கம் போயிட்டாங்க.. இதுதான் உண்மை. இதுக்கப்புறம் திருமாவளவனை கூடவே வச்சு திமுக என்ன பண்ண போகிறது?

    Advertisement

    சிறுபான்மையினரை பலப்படுத்துங்க

    அதற்கு பதிலாக உங்க கட்சியில் இருக்கிற சிறுபான்மையினரையே வைத்தே பலமாக்கலாம். அலிம் புகாரி இப்போது திமுகவுக்கு வந்திருக்கிறார்.. காங்கிரஸ் சிந்தனை இருப்பவர்.. காங்கிரஸ் செய்தது தவறு, திமுகவுக்கு செய்தது துரோகம் என்று சொல்லி திமுகவுக்கு வந்துள்ளார்.

    இப்படியான சிறுபான்மையினர் இருக்கறாங்க ஆட்களை தேடி தேடி திமுக அவர்களின் கையை பலமாக்க வேண்டும்.. ஐயுஎம்எல்-க்கு 2 சீட்டு கொடுத்ததுக்கு பதிலாக ஆவடியில் நாசர் எப்படி இருக்காரு, செஞ்சியில் மஸ்தான் எப்படி இருக்காரு, அது போன்ற பழைய தலைமுறை போல புதிய தலைமுறையை களமிறக்கணும்..

    Advertisement

    சுபேர்கான் திரும்பவும் ஜெயிக்கணும், டாக்டர் சையத் ஹபீஸுல்லா பேச்சாளர், மருத்துவர், சைய ஹபீஸுல்லாவையும் ஒரு எம்எல்ஏ ஆக்கணும், அல்லது ஹபீஸுல்லாவை ஒரு அமைச்சர் ஆக்கலாம்.. வல்லம் பஷீர் இருக்காரு.. இப்படியானவர்கள் எல்லாம் அரசியலில் டீசன்ட்டான மனிதர்கள் என்று பேர் எடுத்தவர்கள்..

    ஆளூர் ஷாநவாஸ் திமுகவுக்கு பலம்

    நாளைக்கு விசிகவில் உட்கட்சி பிரச்சனை ஏதாவது வரலாம்.. ஆளூர் ஷாநவாஸ் இப்போது மன வருத்தத்தில் உள்ளார்.. ஒருவேளை புகாரி போல அவரும் திமுகவுக்கு நாளை வருகிறார் என்றால், அது திமுகவுக்கு மிகவும் சரியானது.. திமுகவுக்கு சரியான நபரும் கூட.

    ஆளுர் ஷாநவாஸ் கட்ட பஞ்சாயத்து செய்தாரு, மிரட்டி பணம் கேட்டாரு, போலீஸ் ஸ்டேஷன் போன் செய்தார் என்றெல்லாம் இதுவரை எந்த பேச்சும் இல்லை.. அதை எப்போதும் அவர் செய்யவும் மாட்டார்.. ஒரு பத்திரிகையாளராக தன்னோட வாழ்க்கையை தொடங்கினவர்.. இப்படியானவர்களை திமுக அரவணைக்கணும்.

    Advertisement

    திமுக இனி என்ன செய்ய வேண்டும்

    அதாவது திமுக என்ன செய்ய வேண்டும் என்ற யதார்த்தத்தைதான் சொல்கிறேன்.. அந்தவகையில் சிறுபான்மைனராக இருந்தும் அவர்களுக்கு அந்த கட்சியில் முக்கியத்துவம் கிடைப்பதில்லை. அதேபோல ஏற்கனவே எம்எல்ஏக்களாக உள்ளவர்களுக்கு வாய்ப்பு தேவை இல்லை, அப்படி செய்தால் அது குதிரை வேற அரசியலாகிவிடும்.. எனவே பேச்சாளர்கள், கட்சிக்காரர்கள், மக்கள் மத்தியில் நல்ல பேர் உள்ளவர்களை எல்லாம் எடுத்து, ரீவேப் செய்தாலே, திமுகவுக்கு கூட்டணியே வேண்டாமே

    அதிமுகவுக்கு கூட்டணி பலமா

    அதிமுகவுக்கும் பெரிய கூட்டணி கிடையாது.. பாஜகவெல்லாம் ஒரு கூட்டணியே கிடையாது.. இன்னும் சொல்லப்போனால் பாஜக வந்தாலே அது கூட்டணியையே குறைத்துவிடும்.. எனவே அதிமுகவுக்கு கூட்டணி என்றாலே அது பாமக மட்டும்தான்.. பாமக வெற்றிக்கு அதிமுக வேலை செய்தது, அதிமுகவுக்கு பாமக வேலை செய்தது.. அமமுகவும் வேலை செய்தார்கள், கஷ்டப்பட்டார்கள், ஆனால் பெரிய வெற்றியை பெறவில்லை.

    Advertisement

    எப்போதுமே கூட்டணி என்பதைவிட சொந்த கட்சி, பலமாக இருக்க வேண்டும். அப்படித்தான் திமுகவும் இருக்க வேண்டும். யாரெல்லாம் கூட்டணியை விட்டு செல்ல நினைத்தார்களோ அவர்கள் எல்லாரு போய்விட்டார்கள். இப்போது கட்சி கிளீன் ஆகிவிட்டது. இப்போது குடும்ப அரசியல் என்ற கெட்ட பெயர் திமுகவுக்கு உள்ளது.. இதையெல்லாம் குறைத்துவிட வேண்டும்.

    ஐயா சபரீசன் அரசியல்

    சமீபத்தில்கூட ஐயா சபரீசன் ஒரு காணொளியை போட்டிருந்தார்.. அதாவது ஒரு அறிக்கை மாதிரி வெளியிட்டிருந்தார்.. உண்மையாக உழைத்தோம், எங்கள் பெயரை கெடுக்கிறார்கள் என்றெல்லாம் அதில் சொல்லியிருந்தார். ஆனால், இங்கே அரசியல் செய்வதற்கு ஸ்டாலின் இருக்கிறார்.

    Advertisement

    ஒருவேளை அவரால் முடியவில்லை, நேரம் இல்லை என்றால், அடுத்த லெவலில் செய்வதற்கு உதயநிதி ஸ்டாலின் இருக்கார்.. இதை சபரீசன் நன்மைக்காகவும், கட்சியின் நன்மைக்காகவும் சொல்கிறேன். பெண் என்ற ஒரு நிறுவனத்தை வேறு யாரிடமாவது அதை ஒப்படைத்து விடலாம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Aloor Shanavas Heading to DMK Side? Vijay’s Growing Influence on Thirumavalavan Votes.. Stalin’s Next Big Political Move