தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.. வழக்கு விசாரணைக்கு மொத்தமாக தடை! ஹைகோரட் அதிரடி

  • சென்னை: தவெக எம்ல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஒவ்வொருவராக சிபிஐ விசாரணை கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருகிறார்கள். எனவே, குதிரை பேரம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடை விதிக்கிறோம் என்று கூறியுள்ளது.

    Advertisement

    தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. விஜய் ஆட்சி அமைந்ததும் தனக்கு உள்ள பெரும்பான்மயை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார்.

    Advertisement

    குதிரை பேர வழக்கு

    இதன் அடிப்படையில் விஜய் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபித்தார். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு அடுத்த 6 மாதங்களுக்கு பிறகே மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க கோர முடியும் என்ற விதி உள்ள நிலையில், சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு, ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ., இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக அவர் புகார் அளித்தார். தன்னிடம் தொலைபேசியில் பேசிய சிலர், கட்சி மாறி வாக்களிக்க 35 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினர்' என, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் திருநாவுக்கரசு உள்பட பலர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 14 பேரை கைது செய்யப்பட்டு, அதில் சிலர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.

    Advertisement

    சிபிஐ விசாரணை கோரி மனு

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இதற்கிடையே, குதிரை பேர வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த ரமேஷ் என்பவர், இந்த குதிரை பேரம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். அதுவரை விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் ரமேசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு மட்டும் இடைக்கால தடை விதித்து இருந்தது. இதே வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜாமீன் பெற்ற சேதுராஜ், கார்த்திக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில், தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், குதிரை பேரம் வழக்கை திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்தால், நேர்மையாக இருக்காது. அதனால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    Advertisement

    ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடை

    இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்த வாதத்தில், இந்த விவகாரத்தில் பொய் வழக்கு ஜோடிக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளன. ஆதாரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது" என்று கூறப்பட்டது.

    இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஒவ்வொருவராக சிபிஐ விசாரணை கேட்டு இந்த உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருகின்றனர். எனவே, குதிரை பேரம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடை விதிக்கிறோம். இந்த மனுக்களை வரும் 27 ஆம் தேதி ஒத்திவைகப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.

    English Summary

    Horse trading: Madras High Court has issued an order staying the entire investigation into the case registered by the Triplicane police regarding alleged horse-trading involving a TVK MLA.