சென்னையில் திடீரென சூறைக்காற்று! தரையிறங்க முடியாதால் திருப்பி விடப்பட்ட விமானங்கள்! பயணிகள் தவிப்பு

  • சென்னை: சென்னையில் பலத்த சூறைக் காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 10 விமானங்கள் பாதிக்கப்பட்டன. ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் பலத்த காற்றால் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்கு சென்றது. இதே போன்று துபாய், அபுதாபி, வாரணாசி, டெல்லி, கொல்க்கத்தாவில் இருந்து வந்த 9 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த வாரம் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. சில இடங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது. இதனால், வெப்பத்தின் தாக்கம் தணிந்து இருந்தது. மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், இந்த வாரம் மீண்டும் வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்தது.

    Advertisement

    தலைநகர் சென்னை உள்பட கடந்த சில நாட்களாக வெயில் உக்கிரம் காட்டி வந்த நிலையில், இன்று வானிலை அப்படியே மாறியது. சென்னையில் காலையில் சூறைக்காற்று வீசியது. பலத்த காற்று காரணமாக வெப்பமும் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. அதேநேரத்தில் புழுதியை அள்ளிக்கொண்டு காற்று பலமாக வீசியது.

    இதனால் மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்களை போலீசார் வெளியேற்றினர். பலத்த காற்று காரணமாக சென்னையில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாததால் திருப்பதிக்கு திருப்பி விடப்பட்டது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    Advertisement

    அதேபோல, துபாய், அபுதாபி, வாரணாசி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த 9 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து விமானங்கள் வருகை தாமதம் ஆனதால் விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்க காத்திருந்த உறவினர்களும் தவிப்புக்கு உள்ளாகினர்.

    English Summary

    Chennai Flight operations were disrupted in Chennai due to strong winds and adverse weather conditions. At least 10 flights were affected, including a Hyderabad-Chennai flight that was diverted to Tirupati after failing to land because of heavy winds. Services of flights arriving from Dubai, Abu Dhabi, Varanasi, Delhi, and Kolkata were also impacted.