சென்னை: டெல்லியில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில், சென்னை எழும்பூரில் நேற்று இரவில் திடீரென கரப்பான் பூச்சி கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதே போன்று சென்னை கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தின் முன்பும் மாணவர்கள் குவிந்து போராட்டம் நடத்திய நிலையில் போராட்டக்காரர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் என்பதை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு மிக பெரியளவில் இளைஞர்கள் ஆதரவு இருக்கிறது. அரசியல் பின்புலம் இல்லாத பலரும் இந்த போராட்டத்தில் அவர்களாகவே சென்று கலந்து கொள்கிறார்கள். இந்த மாணவர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் நேற்று முன் தினம் முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு இளைஞர்கள் திரளானோர் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதால் இப்போராட்டம் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது. நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும், வினாத்தாள் கசிவு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர். நேற்று முன் தினம் நாடாளுமன்றம் நோக்கி அமைதி பேரணி செல்ல முயன்ற அவர்களை போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தடுத்து நிறுத்தி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கடுமையாக தாக்கினர். மேலும் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் காயமடைந்ததாகவும், சிலருக்கு பலத்த காயமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போலீசாருக்கும் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து நேற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போதும் இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் குதித்தனர். பிரதமர் மோடி இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், சோனியா குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்யப்பட்டனர். டெல்லியில் இப்படி பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. சென்னை எழும்பூர் அருகே நேற்று மாலை கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தினர். கரப்பான்பூச்சி கட்சிக்கு ஆதரவாக எஸ்எஃப்ஐ மற்றும் டிஒய்எஃப்ஐ ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களும் களமிறங்கி அங்கு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் கலைந்து செல்ல மறுத்ததால் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று அவர்களை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் சென்னை சிபிஐ அலுவலகம், மதுரை உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியும் செல்லாததால் குண்டுக்கட்டாக கைது செய்து அவர்களை அப்புறப்படுத்தினர்.நீட் தேர்வு
ராகுல், சோனியா காந்தி
சென்னையிலும் போராட்டம்