மானியம் ரூ.5 லட்சம் தரும் வெற்றி வான்மகள் திட்டம்.. பெண்களே டிரோன் ஓட்டலாம்.. யாருக்கு கிடைக்கும்?

  • சென்னை: விவசாயத்தில் பெண்களும் டிரோன் இயக்கி சம்பாதிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டம்தான் வெற்றி வான்மகள் திட்டம். இதில் பெண்களுக்கு டிரோன் இயக்க இலவச பயிற்சி வழங்குவதுடன், விவசாய டிரோன் வாங்கவும் மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்...!!

    Advertisement

    விவசாய வயல்களில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு நிறைய நேரமும் உழைப்பும் தேவைப்படுகிறது. இந்த வேலையை டிரோன் மூலம் விரைவாக செய்ய முடியும். பயிர்களின் வளர்ச்சியையும் கண்காணிக்கலாம். ஆனால், டிரோனை இயக்குவதற்கு முறையான பயிற்சி தேவை. இதை மனதில் வைத்துதான் பெண்களை டிரோன் இயக்குபவர்களாக உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    பெண்கள் சொந்தமாக சம்பாதிக்க வேண்டும்.. மற்றவர்களின் வயல்களிலும் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளைச் செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

    யாருக்கெல்லாம் பயிற்சி?

    இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 500 பேருக்கு அரசு செலவில் டிரோன் இயக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் 100 பேர் பெண்கள். பயிற்சியை முடிப்பவர்களுக்கு டிரோன் இயக்குவதற்கான உரிமமும் வழங்கப்படும். இதற்காக ரூ.1.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    18 முதல் 65 வயது வரையுள்ள பெண்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம் என திட்ட விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    Advertisement

    மொத்தம் 8 நாட்கள் நடைபெறும் பயிற்சியில், டிரோனை இயக்குவது, பராமரிப்பது, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பது, பாதுகாப்பாக இயக்குவது போன்றவை கற்றுத்தரப்படும். பயிற்சியில் சேருபவர்களுக்கு உணவு, தங்கும் வசதியும் வழங்கப்பட உள்ளது.

    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்.. கருடங்கடலில் பதற்றம்! என்ன நடந்தது?

    டிரோன் வாங்க ரூ.5 லட்சம் மானியம்

    டிரோன் வாங்கவும் உதவி கிடைத்தால்தானே பெண்களால் தொழில் தொடங்க முடியும். இதற்காக பயிற்சி பெற்ற 50 பெண்களுக்கு டிரோன் வாங்க 50 சதவீத மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    உதாரணமாக, ரூ.4 லட்சம் மதிப்புள்ள டிரோன் வாங்கினால் ரூ.2 லட்சம் மானியம் கிடைக்கும். ரூ.10 லட்சம் மதிப்புள்ள டிரோன் வாங்கினால் ரூ.5 லட்சம் வரை மானியம் கிடைக்கலாம்.

    இதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த சிறு, குறு பெண் விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம், அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஐடி வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டும் பெங்களூர் பெண்.. வருமானம் பல மடங்கு அதிகம்!

    பெண்களுக்கு எப்படி வருமானம் கிடைக்கும்?

    டிரோன் வாங்கும் பெண் தனது வயலில் மட்டும் அதை பயன்படுத்த வேண்டியதில்லை. மற்ற விவசாயிகளின் நிலங்களிலும் உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளை செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கலாம்... இதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கும் புதிய வேலைவாய்ப்பு உருவாகும்.

    Advertisement

    ஆனால், மானியத்தில் டிரோன் வாங்குபவர்கள் அதை வாங்கிய நாளிலிருந்து குறைந்தது 4 வருடங்களுக்கு விற்கவோ, மற்றவர்களுக்கு மாற்றிக் கொடுக்கவோ கூடாது என்ற நிபந்தனையும் திட்ட விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    18 வயது முதல் 65 வயது வரையுள்ள பெண்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்புக்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்..

    எனினும், இந்தத் திட்டத்துக்கான இறுதி அரசாணை, விண்ணப்ப நடைமுறை உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட பிறகே எப்போது, எப்படிப் விண்ணப்பிக்கலாம் என்பது தெளிவாகும்.

    English Summary

    Subsidy Up to Rs 5 Lakh Under Vetri Vaanmagal Scheme.. Women Can Get Drone Training