வந்தே பாரத் ரயிலில் சடன் மாற்றம்.. ஜூன் 30 சென்னை எழும்பூர் பயணிகளே அலர்ட்! நெல்லையில் நடப்பது என்ன


  • சென்னை: இந்தியாவின் அதிவேக நவீன ரயிலான வந்தே பாரத், முற்றிலும் குளிர்சாதன வசதி மற்றும் அதிநவீன டெக்னாலஜிகளுடன் நகரங்களை இணைத்து பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் அதிவேக ரயில் சேவைகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏன், எப்போது தெரியுமா?

    Advertisement

    இந்தியாவின் அதிவேக நவீன ரயிலான வந்தே பாரத், முற்றிலும் குளிர்சாதன வசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் நகரங்களை இணைக்கிறது.

    Advertisement

    குறைந்த பயண நேரம், சொகுசு இருக்கைகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு வசதிகளால் இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால்தான் வந்தே பாரத் ரயில்களில் நிறைய பேருக்கு உடனே டிக்கெட் கிடைப்பதில்லை.. முன்கூட்டியே புக்கிங் செய்துவிடுகிறார்களாம். அந்த அளவுக்கு இந்த ரயிலுக்கு டிமாண்ட் கூடிக்கொண்டே வருகிறது.

    வந்தே பாரத் பணிகள்

    இந்நிலையில், நெல்லை பணிமனையில் மேற்கொள்ளப்பட உள்ள அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் அதிவேக ரயில் சேவைகளின் நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே, அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

    Advertisement

    அதில், வருகிற ஜூன் 30-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.00 மணிக்கு புறப்பட வேண்டிய எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்: 20627), வழக்கமான நேரத்தை விட 45 நிமிடங்கள் தாமதமாக காலை 5.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை, நாகர்கோவில் தேதி

    இதேபோல், மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வரும் வந்தே பாரத் ரயிலின் நேரமும் ஜூன் 30-ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து அன்று மதியம் 2.20 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்: 20628), வழக்கமான நேரத்தை விட 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக, மாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    Advertisement

    இந்த திடீர் நேர மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை முன்னரே திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

    சென்னை ஐசிஎப் அதிரடி

    இந்நிலையில் ரயில் பயணிகளுக்காக சென்னை ஐசிஎப் ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது.. சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் எனப்படும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையானது, நம்முடைய இந்திய ரயில்வேக்கு தேவையான வந்தே பாரத், அம்ரித் பாரத், மின்சார ரயில் மற்றும் எல்.எச்.பி. (LHB) எனப்படும் இலகுரக ரயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்கி கொண்டிருக்கிறது..

    கடந்த 2023-24 நிதியாண்டில் 2,829 பெட்டிகளும், அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் உற்பத்தியை முறையே 3,007 மற்றும் 3,405 என உயர்த்தியும் ஐ.சி.எப். சாதனை படைத்துள்ளது. இப்படி வரிசையான வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இன்னொரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. ஆம், நடப்பு நிதியாண்டில் உற்பத்தியை இன்னும் அதிகரிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளதாம்.

    Advertisement

    ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகம்

    அதாவது நடப்பு நிதியாண்டில் மொத்தம் 4,500 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க ஐ.சி.எப். தொழிற்சாலைக்கு புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா இலக்கில் 3,520 எல்.எச்.பி. பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 8 புதிய வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகள், 14 அம்ரித் பாரத் ரயில்களுக்கான பெட்டிகள் மற்றும் ஒரு சரக்கு ரயிலுக்கான பெட்டிகள் போன்றவையெல்லாமே அடங்கும்.

    கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் உற்பத்தியை அதிரடியாக அதிகரித்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிக விரைவாக அடைவதற்கான பணிகளில் ஐ.சி.எப். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்களாம்.. ரயில் பெட்டிகள் அதிகரிக்க போவதாக ஐசிஎப் சொல்லியிருப்பது, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது..!!

    English Summary

    Sudden Change in Vande Bharat Train Service: Chennai Egmore Passengers Alert for June 30.. Do You Know What's Happening in Tirunelveli?