பராசக்தி பஞ்சாயத்து..சம்பளத்த கொடுங்க! ஆகாஷ் பாஸ்கரனை நெருக்கிய சுதா கொங்கரா! ஹைகோர்ட் அதிரடி ஆர்டர்

  • சென்னை: பராசக்தி படத்தை இயக்கிய சுதா கொங்கரா தொடர்ந்த வழக்கில், 8.39 கோடி ரூபாயை உத்தரவாதமாக டெபாசிட் செய்ய வேண்டுமென படத்தை தயாரித்த டான் (dawn) பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    Advertisement

    பொங்கல் பண்டியகை முன்னிட்டு நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பராசக்தி' படம் வரும் சனிக்கிழமை திரைக்கு வந்தது. டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ரெட் ஜெயண்ட் இன்பன் உதயநிதி வெளியிட்டார்.

    Advertisement

    1964ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் தயாராகியிருந்தது. அந்த காலத்தின் அரசியல் சூழல், மாணவர்கள் நடத்திய போராட்டங்கள், பொதுமக்களின் உணர்வுகள் ஆகியவை திரைபட வடிவில் எடுத்துக்காட்டப்பட்டிருந்தன.

    நாடு முழுவதும் இந்தி மொழியை அதிகாரப்பூர்வமாக்கும் சட்டம் இயற்றப்பட இருப்பதாகவும், அதற்கு எதிர்ப்புகளும் காட்சிகளும் மாணவர்கள் வெகுண்டெழுந்து போராடிய காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் வெளியாகி இருந்தாலும் போதிய வரவேற்பை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    காரணம் மொழிப்போர் தியாகத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் இடையில் காதல் ரொமான்ஸ் காமெடி என சென்றதால் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இருந்தபோதும் பட்ஜெட்டுக்கு பாதகம் விளைவிக்காமல் வசூலை ஈட்டியது என்றாலும், படத்தின் பட்ஜெட் மிகப்பெரிய அளவில் எகிறியதாகவும் இதனால் இயக்குனர் சுதா கொங்கராவுக்கும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் இடையே மோதல் வெடித்ததாக சொல்லப்பட்டது.

    Advertisement

    இதற்கிடையே இந்த படத்தின் விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. அதற்கு காரணம் சுதா கொங்கரா நீதிமன்றம் சென்றதுதான். படத்தை இயக்க சுதா கொங்கராவிற்கு 15 கோடி ரூபாய் ஊதியம் ஒப்பந்தம் செய்த நிலையில் 8.39 கோடி ரூபாய் ஊதிய பாக்கி வைத்துள்ளதாகவும், அந்த தொகையை பிப்ரவரி 8ஆம் தேதியிலிருந்து 8 சதவீத வட்டியுடன் செலுத்த கோரி சுதா கொங்கரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, டான் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நான்கு வாரங்களுக்குள் 8.39 கோடி ரூபாய் மதிப்புக்கு உத்தரவாதம் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டார். அவ்வாறு செலுத்தத் தவறினால் அந்த நிறுவனத்தின் எதிர்கால படங்களின் வருவாயும் இணைக்கப்படும் என குறிபிட்டுள்ளார்.

    English Summary

    Director Sudha Kongara seeks ₹8.39 crore dues from Parasakthi producers as Madras High Court orders security deposit.