சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ்

  • சென்னை: தமிழகத்தில் ரேஷன் விநியோக முறையில் தவெக அரசு கொண்டு வந்துள்ள அதிரடி மாற்றங்கள் மற்றும் முதியவர்களுக்கு வீடு தேடி வரும் சேவை குறித்த முக்கிய தகவல்கள் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களை ஈர்த்து வருகிறது. தவெக அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை எளிதாக்குவதோடு, விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யும் நோக்கில் அமைந்துள்ளன.. இந்நிலையில் நேற்றைய தினம் அமைச்சர் வெங்கடரமணன் நம்பிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பொது விநியோகத் திட்டத்தில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

    Advertisement

    சர்க்கரை அட்டைதாரர்களுக்கு

    குறிப்பாக, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் மிக முக்கியமாக, முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் வீடு தேடியே ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பு பலதரப்பட்ட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்களுக்குத் தேவையான பொருட்கள் அவர்களின் இல்லத்திற்கே சென்று சேருவது கால விரயத்தைத் தவிர்ப்பதோடு, அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அரசு கருதுகிறது.

    Advertisement

    ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்கள்

    இந்தத் திட்டம் எந்தவிதமான தடையுமின்றி சீராகச் செயல்படுவதை உறுதி செய்யத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை அரசு முழுமையாகச் செய்யும் என்றும், பயனாளிகளுக்கு உயர்தரமான சேவையை வழங்குவதற்காக அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வெங்கடரமணன் உறுதியளித்துள்ளார்.

    அதுமட்டுமல்ல, உணவுப் பாதுகாப்பைத் தாண்டி, பொதுமக்களின் ஆரோக்கியத்தில் தவெக அரசு மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. குறிப்பாக, அனீமியா பாதிப்பு மற்றும் விட்டமின் A, B12 போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, ரேஷன் கடைகள் வழியாக ஊட்டச்சத்து மிக்க பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    தமிழக அரசு குட் நியூஸ்

    தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, இரும்புச்சத்து மற்றும் போலிக் ஆசிட் செறிவூட்டப்பட்ட அரிசி, வைட்டமின் A, D நிறைந்த சமையல் எண்ணெய், மற்றும் செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவற்றை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்ய முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் விநியோகம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது எதிர்கால சந்ததியினரின் உடல்நலனைப் பாதுகாப்பதில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், ரேஷன் விநியோக முறையில் உள்ள குறைகளை களையவும், முறைகேடுகளைத் தடுக்கவும் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். சென்னை மயிலாப்பூரில் நேற்றைய தினமும ஒரு சூப்பர் செய்தியை அறிவித்துள்ளார்.

    Advertisement

    செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலுமாகத் தடுப்பதற்கான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமே இருக்காது என்றும் தெரிவித்தார். மேலும், புதிய ரேஷன் கார்டுகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாகத் துரிதக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஒரு மாதத்திற்குள் புதிய கார்டுகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

    அமைச்சர் நம்பிக்கை

    தொடர்ந்து பேசிய வெங்கடரமணன், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் நோக்கில், ரேஷன் பருப்பு கொள்முதலுக்கான டெண்டர் நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், பங்கேற்கும் நிறுவனங்களின் விவரங்கள் மற்றும் விலைப்புள்ளி போன்ற அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் இணையதளத்தில் வெளிப்படையாகக் காண முடியும்" என்றெல்லாம் தெரிவித்தார்.

    Advertisement

    அமைச்சரின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. ஆனால், டெண்டர் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தகுதியான நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய பணிகளில் ஈடுபடுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தவெக அரசின் இந்த சீர்திருத்தங்கள், ரேஷன் விநியோகத்தில் புதியதொரு வெளிப்படைத்தன்மையையும், செயல்திறனையும் கொண்டு வந்துள்ளது. அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் தமிழகத்தில் பொது விநியோக முறையை ஒரு முன்மாதிரியான கட்டமைப்பாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...!!

    English Summary

    Sugar Card Holders to Get Sweet News! Tamil Nadu Government to Provide Updates on Applications Within 30 Days