சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த சர்க்கரை விலை.. பண்டிகை காலத்தில் ஸ்வீட் கடைகளுக்கு நெருக்கடி!

  • சென்னை: ரக்சா பந்தன், மிலாது நபி மற்றும் தீபாவளி பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், சென்னையில் சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் இனிப்பு தயாரிப்பாளர்கள், பேக்கரிகள் மற்றும் உணவு விநியோகஸ்தர்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

    Advertisement

    இந்தியாவில் முதல்முறை சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் சர்க்கரை தட்டுப்பாடு எதிரொலிக்க தொடங்கி உள்ளது. சர்க்கரை விலை ஏற்றம் காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள சூழலில், சில கடைகள் விற்பனை விலையை உயர்த்தியுள்ளன. பல முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க நஷ்டத்தைச் சகித்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.

    Advertisement

    சென்னையின் சில்லறை சந்தைகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஒரு கிலோ சர்க்கரை ரூ.50 வரை விற்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதன் விலை திடீரென உயர்ந்து கிலோ ரூ.70 வரை எட்டியுள்ளது. கொத்தவால்சாவடி, கோயம்பேடு மொத்த விற்பனை வளாகம் மற்றும் பாரிமுனை போன்ற முக்கிய வர்த்தகப் பகுதிகளில் 50 கிலோ எடையுள்ள சர்க்கரை மூட்டைகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

    இனிப்பு தயாரிப்பாளர்கள் கூறுகையில், சர்க்கரை விலை உயர்வு மட்டுமே இங்கு பிரச்சனை அல்ல. கடந்த சில மாதங்களாகவே பால், நெய், கோவா, சமையல் எண்ணெய், முந்திரி-பாதாம் போன்ற உலர் பருப்புகளின் விலையும் கடுமையாக ஏறியுள்ளது. இதனுடன் வணிக பயன்பாட்டு எல்.பி.ஜி சிலிண்டர் கட்டணம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் சேர்ந்துவிட்டதால் இனிப்பு தயாரிப்பதற்கான ஒட்டுமொத்த உற்பத்திச் செலவு உச்சத்தைத் தொட்டுள்ளது.. இ 20 பெட்ரோல் காரணமாகவே சர்க்கரை தட்டுப்பாடு உள்ளது" எனத் தெரிவித்தனர்.

    Advertisement

    குறிப்பாக, தீபாவளி மிலாது நபி மற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகைக்கான தயாரிப்புகள் தீவிரமடைந்துள்ள வேளையில் இந்த விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு வீடுகளிலும், மொத்த சமையல் கூடங்களிலும் கீர், ஷீர்மால் மற்றும் இனிப்பு பூரிகள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன.

    அதேபோல், இனிப்பு கடைகளிலும் வழக்கத்தை விடக் கூடுதல் உற்பத்தி நடைபெறுகிறது.

    பாரம்பரிய இனிப்புகள் மற்றும் கேட்டரிங் ஆர்டர்களுக்கு சர்க்கரையின் தேவை மிக அதிகம். பாகு மற்றும் உள்ளே வைக்கப்படும் பூரணத்திற்குச் சர்க்கரையை மாற்றாக எதுவும் பயன்படுத்த முடியாது. சர்க்கரை மூட்டையின் விலை திடீரென நூற்றுக்கணக்கில் உயர்ந்ததால், வேறு வழியின்றி கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை இனிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்கிறார்கள் சர்க்கரை உரிமையாளர்கள்.

    Advertisement

    இருப்பினும், அனைத்துக் கடைகளும் இந்த கூடுதல் சுமையை நேரடியாக வாடிக்கையாளர்கள் மீது சுமத்தவில்லை. தி.நகர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பல பிரபல இனிப்பு கடைகள் பண்டிகைக் கால விற்பனையைக் கருத்தில் கொண்டு தற்போதைக்கு விலையை உயர்த்தாமல் பழைய விலையிலேயே விற்று வருகின்றன.

    ரக்சா பந்தன் நேரத்தில் காஜு கட்லி, லட்டு, குலாப் ஜாமுன், ரசகுல்லா போன்றவற்றுக்கு மிக அதிக தேவை இருக்கும். இந்த நேரத்தில் விலையை உயர்த்தினால் வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள், விலையை உயர்த்தாமல் போனால் கடை நிறுவனர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கடை நிறுவனர்கள் குமுறுகிறார்கள்.

    English Summary

    Sugar Price Surge in Chennai: Sweet Shops and Bakeries Face Margin Pressure