சென்னை: இந்திய அளவில் சர்க்கரையின் விலை திடீரென உயர்ந்து இருப்பது பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது, குறிப்பாக தமிழகத்தில் 60 ரூபாயை சர்க்கரை விலை எட்டியிருக்கும் நிலையில் டீ. காபி போன்றவற்றின் விலை உயர்ந்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் பேக்கரி தொழில் கடும் நெருக்கடியில் இருப்பதாக சொல்கின்றனர் உரிமையாளர்கள். பேக்கரிகளில் இனிப்புகள், கேக்குகள் என அனைத்துக்கும் சர்க்கரை அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையில் திடீர் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்கின்றனர் பேக்கரி உரிமையாளர்கள்.
தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கடந்த சில தினங்களாக உணவுப் பொருட்கள் திடீரென உயர்வை கண்டு வருகிறது. சமையலுக்கு அத்தியாவசியமாக பயன்படுத்த வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அன்றாடம் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படும் சர்க்கரை விலை எதிர்பாராத அளவு எகிறியது பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் குடும்ப தலைவர்களை நிலைகுலை செய்துள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அருகில் சர்க்கரை இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கு திடீரென பெய்த மழை காரணமாக சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவு விலை ஏற்றம் வந்தது. குறிப்பாக கடந்த 10 நாட்களில் வரலாற்றிலேயே இல்லாத அளவு சர்க்கரை விலை உயர்ந்தது. எத்தனால் உற்பத்திக்கு சர்க்கரை பயன்படுத்தப்பட்டதால் தான் விலை ஏற்றம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அப்படியெல்லாம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தது. இது ஒரு புறம் இருக்க 50 கிலோ சர்க்கரை மூட்டை 3,600 வரை உயர்ந்த நிலையில், சில்லறை விற்பனையில் 80 ரூபாய் வரை விற்பனையானது. சிலர் சர்க்கரையை பதுக்க தொடங்கிய நிலையில் அதிரடி ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் சர்க்கரை போக்குவரத்தில் ஏற்பட்ட காலதாமதம் தான் விளைவு என சொல்ல நிலையில் ஒதுக்கீட்டு முறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இறக்குமதிக்கும் சில தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்ட நிலையில் தற்போது விலை குறைந்து வருகிறது என சொல்லப்படுகிறது. கடந்த 24ஆம் தேதி 75 ரூபாயாக இருந்த சக்கரை விலை தற்போது 65 ரூபாய் வரை வந்ததாக சொல்லப்பட்டாலும், உணவகங்கள், பேக்கரிகளில் சர்க்கரை விலை உயர்வு காரணமாக உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டீ காபி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் டீக்கடைகளிலும் பேக்கரிகளிலும் உணவு பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக சொல்கின்றனர். பேக்கரி தொழிலை பொறுத்தவரை கேக்குகள், இனிப்புகள், டீ காபி என பெரும்பாலும் சர்க்கரையை சார்ந்த உற்பத்தி இருக்கிறது. இதனால் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக சொல்கின்றனர். ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நாங்கள் தற்போது சர்க்கரை விலை உயர்வான பாதிக்கப்பட்டிருக்கிறோம். மேலும் பப்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படும் காய்கறி, வெங்காயம் ஆகியவற்றின் விலையும் உயர்ந்திருப்பதால் விலையை உயர்த்தியுள்ளோம் என்கின்றனர். சர்க்கரை விலை ஏற்றதால் பட்ஜெட்டில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், டீ காபி ஆகியவற்றின் விலையும் வெளியிடங்களில் உயர்த்தப்பட்டுள்ளதால் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.சர்க்கரை விலை உயர்வு
ஒதுக்கீட்டு முறை
மத்திய அரசு
டீ-காபி விலை
குடும்ப பட்ஜெட்