Zepto, Blinkit, Swiggy-ல் சர்க்கரையை வாங்க புதிய கட்டுப்பாடு! ஒரு நபர் எவ்வளவு வாங்கலாம்? விவரம்

  • சென்னை: நாடு முழுவதும் சர்க்கரை விலை உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக Zepto, Blinkit மற்றும் Swiggy போன்ற நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

    Advertisement

    அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி, அதன் பின்னர் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என.. ஜனவரி மாதம் வரை பண்டிகை நாட்கள் வர இருக்கின்றன. இந்த நேரத்தில் சர்க்கரை விலை அதிகரித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    சர்க்கரை தட்டுப்பாடு காரணமாக Zepto, Blinkit மற்றும் Swiggy போன்ற ஆன்லைன் செயலிகளில் வாடிக்கையாளர்கள் சர்க்கரை வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக Swiggy இன்ஸ்டாமார்ட்டில் ஒரு ஆர்டருக்கு அதிகபட்சமாக 2 கிலோ மட்டுமே வாங்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. பிளிங்கிட் மற்றும் செப்டோ நிறுவனங்களும் இதே போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருக்கின்றன.

    இதுபோக நேரடி விற்பனை கடைகளிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. டி-மார்ட் மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரிய சில்லறை விற்பனை கடைகளில் ஒரு வாடிக்கையாளருக்கு 2-3 கிலோ மட்டுமே சர்க்கரை வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்க்கரையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நேற்று சர்க்கரையின் சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ.65.05 என விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்னர் விலை ரூ.48 ஆக இருந்தது.

    Advertisement

    சர்க்கரை உற்பத்தி எதிர்பார்த்ததை விட குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. பண்டிகை காலத்தை ஒட்டி அதிகரித்திருக்கும் தெவை மற்றும் சில இடங்களில் நிலவும் பதுக்கலும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தட்டுப்பாட்டை போக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பதுக்கலை தடுக்க இருப்பு வைக்க வரம்பு விதித்தல் மற்றும் சர்க்கரை இறக்குமதி விதிகளை தளர்த்துதல் போன்ற முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.

    English Summary

    Swiggy Instamart impose purchase limits: Sugar prices have risen across the country. Consequently, new restrictions have been imposed on companies such as Zepto, Blinkit, and Swiggy. A series of festivals—including Vinayagar Chaturthi, followed by Ayudha Puja, Saraswati Puja, Diwali, Christmas, and Pongal—are lined up through January. The hike in sugar prices during this period has come as a shock to the public.