தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு

  • சென்னை: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து பிரபல பேச்சாளர் சுகி சிவம் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். எந்தக் கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல், "ஒருவர் வென்றது அல்லது வென்றது போல் காட்சியளிப்பது என்று சொல்லலாம்; ஆனால் அது மிகப்பெரிய விபத்து" எனக் கூறிய அவர், காலப்போக்கில் மக்கள் உண்மையை புரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

    Advertisement

    சினிமா கவர்ச்சியால் தவெகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், பிரபல பேச்சாளர் சுகி சிவம், தவெக வெற்றி பெற்று இருப்பதை பெயர் குறிப்பிடாமல் விபத்து என விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    எவ்வளவு பெரிய விபத்து

    முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இதில் பிரபல பேச்சாளர் சுகி சிவம் பங்கேற்று பேசினார். கலைஞர் கருணாநிதியின் சிறப்புகள், பெருமைகளை பற்றி பேசிய சுகி சிவம், சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்தும் தனக்கே உரிய பாணியில் பேசினார். சுகி சிவம் பேசியதாவது:-

    அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஒருவர் வென்றது.. அல்லது வென்றது போல் காட்சியளிப்பது.. அல்லது வென்றது போல கட்டமைக்கப்பட்டது என எத்தனையோ வார்த்தைகளை பயன்படுத்தலாம். ஆனால் அது எவ்வளவு பெரிய விபத்து என்று நான் உங்களுக்கு ஒன்றை புரிய வைக்கிறேன். என்னுடைய மருத்துவர் ஒருமுறை வருத்தப்பட்டு ஒரு செய்தியை சொன்னார். நான் அவரது மருத்துவமனையில் காத்திருந்தேன்.

    Advertisement

    விஷம் குடிச்சிட்டான்

    அவர் வர தாமதம் ஆகிவிட்டது. என்னய்யா எங்கே போனீங்க.. இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே என்று கேட்டேன். அவர் சொன்னார்.. எங்க வீட்டில் வேலை பார்க்கிற அம்மாவின் மகன் விஷம் குடித்துவிட்டான்.. அவனை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். அதனால் நான் அங்கே போயிவிட்டேன்.. அங்கே போய் பார்த்து அவனை காப்பாற்ற எல்லா ஏற்பாடும் பார்த்துவிட்டு அப்புறமாக நான் இங்கே வந்து இருக்கிறேன் என்றார்.

    அந்த பையன் எதற்கு விஷம் குடிச்சான் என்று கேட்டேன். அவன் காதலித்தான். காதலித்த பொன்னை கல்யாணம் பண்ண வேண்டும் என்று சொன்னான். அவுங்க வீட்டிலும் ஒத்துக்கல.. பொண்ணு வீட்டிலும் ஒத்துக்கல.. அதனால் விஷம் குடிச்சிட்டான்.. சரி இப்போ என்ன நடந்து இருக்கிறது என்று கேட்டேன்.. இனிமேல் அவன் உயிரோடு இருந்தும் வேஸ்ட்.. காப்பாற்றிவிட்டோம்..

    Advertisement

    எல்லா சினிமாவிலும்..

    ஆனால், கழுத்தில் இருந்து குடல் வரை வெந்து புண்ணாகிவிட்டது. சாப்பிடவே முடியாது.. இனிமேல் அவன் இருப்பதும் ஒன்னுதான் செத்துப்போறதும் ஒன்னுதான்.. நீங்க அந்த பையனை ஏன் விஷம் குடித்தாய் என்று கேட்க கூடாதா என்று நான் கேட்டேன்.. அதற்கு மருத்துவர்.. கேட்டேன் சார்.. அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உக்காந்து இருக்கேன் என்றார்.

    எல்லா சினிமாவிலும் காதலிப்பாங்க.. பெற்றோர் எதிர்த்த உடன் விஷம் குடிப்பாங்க.. விஷம் குடிச்சதும் பெற்றவர்கள் மனசு மாறி ரிஜிஸ்டர் ஆபிஸில் மாலை மாற்றிப்பாங்க.. உடனே சுபம் என படம் முடியும். அதுதான் நடக்கும் என நினைத்து நானும் விஷம் குடிச்சேன். என்று சொன்னான். ஏனெனில் சீன் பை சீன் அவன் பார்த்துட்டான்.. எனக்கு கல்யாணம் ஆயிடும் என நினைச்சேன் என்று இருக்கிறான்..

    Advertisement

    ஒரு பிலிமில் மாற்றிவிடலாம்

    சாப்பிடவே முடியாது.. உனக்கு வாழ்க்கையே கிடையாது.. என்னடா இப்படி பண்ணிட்டியேன்னு டாக்டர் சொல்லியிருக்கிறார். இந்த காட்சிகள் எப்படி நிஜமாக நம்பப்பட்டதோ, அதேபோல தமிழ்நாடு இப்போதைக்கு விஷம் குடித்து இருக்கிறது. ஆனால், தமிழர்கள் மீது உள்ள அக்கறையில் சொல்கிறேன். இவ்வளவு குழந்தைத்தனமாக இருக்கிறீர்களே.. பெற்ற வயிறு பற்றி எரிய.. நான் வருத்தப்பட்டு சொல்கிறேன்.

    ஒரு காட்சியும் அடுத்த காட்சியும் ஒரு பிலிமில் மாற்றிவிடலாம். ஆனால் நடைமுறையில் மாற்றுவதற்கு 50 ஆண்டு காலம் இந்த மனிதனை (கலைஞர்) போன்று ஒருவர் படாத பாடு படவேண்டும்" இவ்வாறு அவர் பேசினார். சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை மறைமுகமாக விமர்சித்து சுகி சிவம் மேற்கண்ட கருத்தை கூறியுள்ளார்.

    English Summary

    Suki Sivam Criticises Without Naming the Vijay TVK Party;Amid criticism over the recent election outcome, noted speaker Suki Sivam made a veiled remark without naming any party, describing the result as a major setback. He said people would eventually understand the true nature of what had happened.