தமிழக அரசியல் எப்படி இருக்கு? கையெடுத்து கும்பிட்ட சுந்தர் சி.. அடுத்து சொன்ன பதில்!

  • சென்னை: கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் என்டிஏ கூட்டணியில் போட்டியிட்டவர் சுந்தர் சி. இப்போது சினிமாவில் பிஸியாகியுள்ள சுந்தர்.சியின் அடுத்த படம் மூக்குத்தி அம்மன் 2 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே அவரிடம் தமிழக அரசியல் எப்படி இருக்கு என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அவர் கையெடுத்து கும்பிட்டுவிட்டு நகர்ந்தார். அவரது செயல் இப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    Advertisement

    'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் வெற்றிபெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் உடன் இருந்தார். இருவரும் சேர்ந்தே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

    Advertisement

    மூக்குத்தி அம்மன் 2

    தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சுந்தர் சி தனது அடுத்த படம் குறித்தும் ஜெயிலர் 2 வசூல் சாதனை குறித்தும் பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர் சி, "இன்று ஏழுமலையானை தரிசிக்க வந்திருக்கிறோம். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவதாக எனது அண்ணனுடைய (ஏ.சி.சண்முகத்தை சொல்கிறார்) பேரக்குழந்தைகளுக்குப் பிறந்தநாள். அவர்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வந்தோம்.

    இரண்டாவதாக நான் இயக்கியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் வரும் 6ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் மக்களுக்கு பிடித்து மிக பெரிய வரவேற்பை பெற வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டோம்" என்றார்.

    Advertisement

    அரண்மனை 5

    அடுத்ததாக 'அரண்மனை 5' திரைப்படம் எப்போது வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "முதலில் வெளியாகவுள்ள படங்களை முடிப்போம். தீபாவளிக்கு 'மூக்குத்தி அம்மன் 2' வெளியாகிறது. பொங்கலுக்கு 'குஷன்' திரைப்படம் வருகிறது. அதன் பிறகு அடுத்த படங்கள் குறித்து முடிவு செய்வோம். 'மூக்குத்தி அம்மன்' படத்தையும் 'அரண்மனை' போல முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என தொடர்ந்து எடுப்பீர்களா என்று கேட்கிறீர்கள். அதையெல்லாம் அந்த ஏழுமலையான்தான் சொல்ல வேண்டும்" என்று சிரித்தபடி தெரிவித்தார்.

    ஜெயிலர் 2

    ஜெயிலர் 2 திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்திருப்பது குறித்து பேசிய சுந்தர் சி, "இந்த சாதனையை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தான் இன்னமும் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினிகாந்த் தொடர்ந்து நிரூபித்து கொண்டே இருக்கிறார். தமிழகத்தில் அதிக வசூல் ஈட்டிய படமாக 'ஜெயிலர் 2' அமைந்திருப்பது பெருமைக்குரிய விஷயம். சூப்பர் ஸ்டார் என்னைக்குமே சூப்பர் ஸ்டார்தான். ரஜினிகாந்தை வைத்து மீண்டும் படம் இயக்குவது குறித்தும் விரைவில் தெரியவரும்" என்றார்.

    Advertisement

    கையெடுத்து கும்பிட்ட சுந்தர் சி

    இதற்கிடையே தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் சுந்தர் சியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு அரசியல் எப்படி இருக்கு என்ற செய்தியாளர் கேட்டதற்கு கையெடுத்து கும்பிட்ட சுந்தர் சி, "தமிழ்நாடு நன்றாக இருக்கிறது. எல்லாமே நன்றாக இருக்கிறது" என்று மட்டும் பதிலளித்தார். அரசியல் குறித்துக் வேறு எதையும் பேசாமல், கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

    கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக மூக்குத்தி அம்மன் 2 உருவாகியுள்ளது. பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

    English Summary

    Actor-director Sundar C was asked about the current political situation in Tamil Nadu(தமிழக அரசியல் குறித்து சுந்தர் சி சொன்ன பதில்): Sundar C on Tamil nadu politics latest news in tamil.