“சூப்பர் எல்-நினோ இன்னும் 2 மாதங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்”: டெல்டா வெதர்மேன் வார்னிங்!

  • சென்னை: தமிழகத்தில் சூப்பர் எல் நினோ இன்னும் 2 மாதங்களில் மழை காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சூப்பர் எல்நினோ தாக்கம் காரணமாக தட்ப வெப்ப நிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கடும் வெப்பம், வறட்சி, பெரு வெள்ளம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளனர்.

    Advertisement

    இந்த நிலையில் தமிழகத்தில் சூப்பர் எல் நினோ இன்னும் 2 மாதங்களில் மழை காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளரான 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்தர் தெரிவித்து உள்ளார். மழைக்காலத்தில், நவம்பர் - டிசம்பர் மாதங்களில் சென்னையில் வெள்ளம் ஏற்படுவது ஆண்டுதோறும் தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் இந்த எச்சரிக்கை சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பதாக அமைந்துள்ளது.

    இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், "மிகப்பெரிய சூப்பர் எல் நினோ உருவாகி வருகிறது. வரலாறு காணாத அளவுக்கு அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நகர்ந்து வருகிறது.
    வெப்ப நிலை மாறுபாடு 29.6 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்து உள்ளது. இது சராசரி அளவை விட கூடுதலாக 2.75 டிகிரி செல்சியஸ் அதிகம் எனக் கூறப்படுகிறது.

    Advertisement

    வரலாற்றில் முதல்முறையாக, இந்த மாதத்திலேயே ஒரு சூப்பர் எல் நினோ முழுமையாக உருவாகி உள்ளது. இந்த மாத இறுதிக்குள், 2015 மற்றும் 1997 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோ அளவுக்கு இது இருக்கலாம். அல்லது அதைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த மேற்கு நோக்கிய காற்று வெடிப்பு தொடர் நிகழ்வாக உள்ளது.

    இதன் காரணமாக கெல்வின் அலைகள் உருவாகி, கடலுக்குள் இருக்கும் கூடுதல் வெப்பத்தை மேல்நோக்கி கொண்டு சென்று எல் நினோவின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்தும். இதன் விளைவாக, மிகப்பெரிய சூப்பர் எல் நினோ நவம்பர் மாதத்திற்குள் உருவாவது உறுதியாகும் எனக் கூறப்படுகிறது.

    Advertisement

    எல் நினோ பூமியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று எண்ணி அலட்சியமாக இருக்க வேண்டாம். நீங்கள் இப்போதே விழிப்புடன் இருந்து தயாராக வேண்டும். இல்லையென்றால், அதன் விளைவுகள் உங்களை கடுமையாக பாதிக்கும். எப்போதும் நினைவில் நிற்கும் அளவுக்கு மிகவும் தீவிரமான சூப்பர் எல் நினோவின் தாக்கங்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் தயாராக வேண்டியது அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Delta Weatherman Hemachandar has stated that a 'Super El Niño' could cause a massive impact during the rainy season in Tamil Nadu in the next two months.