சூப்பர் மார்க்கெட், அமுதம் அங்காடிகளில் ரூ.30 சன்னரக அரிசி.. சென்னையில் எங்கே கிடைக்கும் தெரியுமா?

  • சென்னை: அரிசி விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குறைந்த விலையில் சன்னரக அரிசி கிடைக்கும் வகையில், கிலோ ரூ.30-க்கு அரிசி விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்தவகையில் சென்னையில் எந்தெந்த இடங்களில் இந்த அரிசி கிடைக்கும் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!

    Advertisement

    அரிசி, பருப்பு, எண்ணெய் என அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், சாமானிய மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் தமிழக அரசு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ரூ.30 சன்னரக அரிசி

    முதற்கட்டமாக சென்னையில் 11 அமுதம் அங்காடிகள், 19 கூட்டுறவு அங்காடிகள் என மொத்தம் 30 அங்காடிகளில் விற்பனை தொடங்கியுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.

    Advertisement

    இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 25,000 மெட்ரிக் டன் சன்னரக அரிசியை கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கூட்டுறவுத் துறையின் 201 அங்காடிகள், 49 அமுதம் அங்காடிகள் என மொத்தம் 250 அங்காடிகள் மூலம் அரிசி விற்பனை செய்யப்பட உள்ளது.

    துவரம் பருப்பு ரூ.130-க்கு கிடைக்குமா?

    இதில் ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை அரிசி வாங்கலாம். அதாவது, 5 கிலோ அரிசி வாங்கினால் ரூ.150 செலுத்தினால் போதும். அரிசி விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த விலையில் சன்னரக அரிசி கிடைப்பது மக்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அதேபோல வெளிச்சந்தையில் கிலோ ரூ.170 முதல் ரூ.190 வரை விற்கப்படும் துவரம் பருப்பை கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்வது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. இந்தத் திட்டமும் ஓரிரு நாட்களில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையில் அரிசி கிடைக்கும் இடங்கள்

    சென்னையில் கீழ்ப்பாக்கம் தம்புசாமி சாலையில் உள்ள அமுதம் அங்காடி, மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம், நந்தனம் சாமியர்ஸ் சாலை, ராயப்பேட்டை வெங்கடாசலம் தெரு, கே.கே. நகர் ராமசாமி சாலை, போரூர் டிரங்க் சாலை, அண்ணா நகர் 3-வது அவென்யூ, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகில், வடபழனி சத்யமூர்த்தி தெரு, கோபாலபுரம் கான்ரன் ஸ்மித் சாலை மற்றும் தாம்பரம் மேற்கு சண்முகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமுதம் அங்காடிகளில் இந்த அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    இதுதவிர, ராஜா அண்ணாமலைபுரம் இராமகிருஷ்ணா மடம் சாலையிலுள்ள காமதேனு கூட்டுறவு அங்காடி, மயிலாப்பூர், தியாகராய நகர், ஜார்ஜ் டவுன், திருவல்லிக்கேணி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கூட்டுறவு அங்காடிகளிலும் விற்பனை விரிவுபடுத்தப்படுகிறது.

    வானதி சீனிவாசன் கையிலெடுத்த சேலம் ரேஷன் அரிசி.. கூட்டுறவு அங்காடிகளில் இதுதான் நடக்கிறதா

    திறந்த சந்தை - பருப்பு விலை

    அடையாறு, பெரம்பூர், வில்லிவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளிலுள்ள கூட்டுறவு அங்காடிகளிலும் அரிசி கிடைப்பது குறித்து பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள அங்காடிகளில் விசாரித்துக்கொள்ளலாம்.

    திறந்த சந்தையில் அரிசி மற்றும் பருப்பு விலை உயர்வால் குடும்பச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Supermarkets, Amudham and Cooperative Stores Selling Rs 30 Fine Rice in Chennai..Where to Buy