உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது.. சீராய்வு மனு போடுங்க! தமிழக அரசுக்கு ஸ்டாலின் அட்வைஸ்

  • சென்னை: சமூகரீதியான பின்னடைவு (social backwardness) ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை. இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மு.க ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு தனியாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதற்காக ஏழு குறிப்பிட்ட முஸ்லிம் சமூகங்கள் அரசுப் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர, சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் (SC) வகுப்புகளில் இருந்து இஸ்லாம் மதத்தைத் தழுவுபவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூக சான்றிதழ் வழங்கி, அவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.

    Advertisement

    இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதம் மாறுவது ஒரு தனிநபரின் சொந்த விருப்பம்.

    ஆனால், ஒருவர் தனது மதத்தை மாற்றிவிட்டார் என்பதற்காக மட்டுமே, அரசு அறிவித்துள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் ஒரு அங்கமாக அவர் தானாக மாறிவிட முடியாது. தமிழக அரசின் இந்த நடைமுறை சமூகத்தில் ஒரு 'செயற்கையான புதிய குழுவை' உருவாக்கிவிடும் என்று கூறி உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது.

    Advertisement
    முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு வேட்டு.. உச்ச நீதிமன்றத்தில் கோட்டைவிட்ட தவெக அரசு? உரிமை பறிபோனது!

    உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

    இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். சமூகரீதியான பின்னடைவு (social backwardness) ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை.

    Advertisement
    இஸ்லாமிற்கு மாறினால் இடஒதுக்கீடு கிடைக்காது! தமிழக அரசின் மனுவில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

    இதுவே சமூக யதார்த்தமாக இருக்கும் நிலையில், "இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC (M) பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை" எனும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது. தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இஸ்லாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.கடந்த #DravidianModel அரசில், கிறித்தவர்களாக மதம் மாறும் ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம்.

    Advertisement

    அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். சாதியினால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட BC, MBC, SC மக்களுக்கு அதனையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்" என்று கூறியுள்ளார்.

    English Summary

    Supreme Court : Social backwardness does not occur in a single day or a single generation; it is the result of a social structure that has persisted for thousands of years. It does not vanish simply because one converts to another religion. M.K. Stalin has urged the Tamil Nadu government to immediately file a review petition to protect the reservation rights of individuals from backward communities who have converted to Islam.