சூர்யவன்ஷியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? குடும்ப பின்னணி தெரியுமா?

  • சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வரும் இளம் வீரர் 15 வயது சூர்யவன்ஷியின் சொத்து மதிப்பு மற்றும் குடும்ப பின்னணி குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    Advertisement

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15 வயதே ஆன சூர்யவன்ஷியின் ஆட்டம் பிரமிக்க வைத்துள்ளது. உலகின் முன்னணி பந்து வீச்சாளர்களின் பந்தை கூட எந்த வித தயக்கமும் இன்றி அநாயசமாக சிக்சருக்கு விளாசி கிரிக்கெட் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார்.

    Advertisement

    15 வயதிலேயே இப்படி ஒரு திறமையா என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பாவன்கள் கூட வியக்கும் அளவிற்கு சூர்யவன்ஷியின் பேட்டிங் திறன் உள்ளது. அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை பந்துகளை சூர்யவன்ஷி சிதறடித்து வருகிறார். குறிப்பாக நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார்.

    மும்பையில் ஆடம்பர அபார்ட்மென்ட்

    மூன்று ரன்களில் சதத்தை மட்டுமின்றி உலக சாதனையும் மிஸ் செய்தார். 15 வயதிலேயே கிரிக்கெட் உலகை தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்த சூர்யவன்ஷி குறித்த பல சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. பீகார் மாநிலத்தை சேர்ந்த சூர்யவன்ஷியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய விவரங்கள் வருமாறு:-

    Advertisement

    சூர்யவன்ஷிக்கு சொந்தமாக மும்பையில் ஒரு ஆடம்பர அபார்ட்மன்ட் உள்ளது. அதன் மதிப்பு ரூ.2.5 கோடியில் இருந்து 3 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பீகாரில் சூர்யவன்ஷியின் மூதாதையர்களுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அதன் மதிப்பு ரூ.40 லட்சம் முதல் 60 லட்சம் வரை இருக்கலாம்.

    ஐபிஎல் மூலம் வருமானம்

    ஐபிஎல் ஒப்பந்தங்கள் மூலமும் சூர்யவன்ஷியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. சூர்யவன்ஷியின் இரண்டாவது ஐபிஎல் சீசன் இதுவாகும். ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வழங்கிய ஒப்பந்தத்தின் மூலம், அவர் ஆண்டுக்கு ரூ.1.1 கோடி சம்பளம் பெற்று வருகிறார். அடிப்படை விலையோடு சூர்யவன்ஷி ஒவ்வொரு போட்டியிலும் ரூ.7.5 லட்சம் சம்பாதித்து வருகிறார்.

    Advertisement

    தனது கிரிக்கெட் கேரியரில் இதுவரை 22 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யவன்ஷி போட்டி கட்டணமாக மட்டும் ரூ.1.65 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இதுபோக, சூர்யவன்ஷி பல போட்டிகளில் பரிசுத்தொகையும் வென்றுள்ளார். அந்த வகையில், ரூ.17 லட்சம் மதிப்புள்ள டாடா கர்வ் Tata Curvv- இவி வாகனம் பரிசாக பெற்றுள்ளர்.

    சொத்து மதிப்பு ரூ 10 கோடி

    கடந்த பிப்ரவரி மாதம் 2026 ஆம் ஆண்டு சூர்யவன்ஷிக்கு அப்போதைய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ரூ.50 லட்சம் பரிசாக அளித்தார். சூர்யவன்ஷி விளம்பர ஒப்பந்தங்கள் மூலமும் வருவாய் ஈட்டி வருகிறார். ஐபிஎல் வருமானம், சொத்துக்கள் மற்றும் பரிசுத் தொகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பான்சர் ஒப்பந்தங்கள் காரணமாக அந்த மதிப்பு ரூ.10 கோடியை தாண்டியிருக்கலாம் என்று தெரிகிறது.

    Advertisement

    சூர்யவன்ஷியின் தந்தை

    சூர்யவன்சியின் தந்தையும் கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டவர்தான். ஆனால், போதிய வசதி இல்லாததால், தனது கிரிக்கெட் கனவை கைவிட்டுள்ளார். ஆனாலும் மகனை மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் ஆக்க வேண்டும் என்று நினைத்து, அதற்காக தனது குடும்ப சொத்துகளை கூட விற்று சூர்யவன்ஷியை பயிற்சியில் சேர்த்துள்ளார். சூர்யவன்ஷி பயிற்சி எடுக்க வீட்டிலேயே பிரத்யேக வலைப்பயிற்சி மையத்தையும் கட்டியுள்ளார்.

    சூர்யவன்ஷிக்கு மொத்தம் 4 சகோதரர்கள் உள்ளனர். சூர்யவன்ஷியின் அண்ணன் உஜ்வால்தான் வீட்டின் நிதி பொறுப்புகளை கவனித்து வருகிறாராம். இதனால், சூர்யவன்சிக்கு முழு பக்க பலமாக அவரது தந்தை சுதந்திரமாக இருக்க முடிந்துள்ளது. சூர்யவன்சிக்கு விஷால் மற்றும் ஆசிர்வாத் என மேலும் இரு சகோதரர்கள் உள்ளனர்.

    English Summary

    Suryavanshi: Young IPL star Suryavanshi has impressed cricket fans with his explosive batting performances at just 15 years old. Reports suggest his net worth may have crossed Rs.10 crore through IPL contracts, prize money, luxury assets, and endorsement deals, while his father once sacrificed his own cricket dream.