அரசு பள்ளி மாணவிகளுக்கு டீசர்ட், டிராக் பேண்ட்.. 6 ஆம் வகுப்பு முதல் ஏஐ கல்வி.. அமைச்சர் ராஜ்மோகன்

  • சென்னை: அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் ஏஐ கல்வி கொண்டு வரப்படும் என சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். மேலும், அரசு பள்ளி மாணவிகளுக்கு பள்ளிச் சீருடையுடன் டீசர்ட், டிராக் பேண்ட் வழங்கப்படும் என்றும், அரசு பள்ளிகளில் தினமும் உடற்கல்வி வகுப்பு உண்டு எனவும், இதனை மற்ற ஆசிரியர்கள் யாரும் இதை மாற்றக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று சட்டசபையில் நிதி நிலை அறிக்கை 2026 - 2027-இல் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

    Advertisement

    அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சீருடையுடன் ஸ்போர்ட்ஸ்க்கான டீசர்ட் மற்றும் டிராக் பேண்டும் வழங்கப்படும் என அறிவித்தார். "டிஎன் அறிவு" 2027-2028 ஆம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுக்க அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

    இந்த புதிய பாடத்திட்டமானது, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அறிவு பவுண்டேஷன், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை அறிவு டிஸ்கவரி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அறிவு எட்ஜ் என்ற வளர்ச்சிக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு தொடக்க நிலையில் வலுவான அடித்தளத்தையும், நடுநிலையில் ஆழமான புரிதலையும், எதிர்காலத் திறன்களையும் மாணவர்களிடம் உருவாக்கும் வகையில் செயல்படுத்தப்படும்.

    Advertisement

    ரூ.1.45 கோடியில் வாசிப்பை நேசிப்போம் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு நாளிதழ்களும் பொது நூலகங்களில் இருந்து நூல்களும் வழங்கப்படும். நடுநிலைப் பள்ளிகளுக்கு 150 சிறார் நூல்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 200 நூல்கள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் வழங்கப்படும்.

    ரூ.4.82 கோடி நிதி ஒதுக்கீட்டில் 3,205 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ்ப் பேச்சு உயிர் மூச்சு என்ற பெயரில் தமிழ்சார் பயிற்சி வழங்கப்படும். தமிழகத்தில் எந்த பள்ளியிலும் ஒரு உடற்கல்வி வகுப்பைக் கூட மாற்றம் செய்யக் கூடாது என தவெக அரசு முடிவெடுத்துள்ளது. உடற்கல்வி வகுப்பை மாற்றிவிட்டு, கணிதமோ அல்லது அறிவியல் வகுப்போ எடுக்கின்றனர். என்றைக்காவது கணித வகுப்பை மாற்றிவிட்டு உடற்கல்வி வகுப்பிற்கு அனுப்பியிருக்கிறார்களா? இந்த சூழலை மாற்றுவதற்காகவும், உடலை உறுதி செய்வதற்காகவும் மாணவர்களின் சிந்தனையை செதுக்குவதற்காகவும் பல்வேறு அறிவிப்புகளை உருவாக்கியிருக்கிறோம். என்று கூறினார்.

    English Summary

    Minister Rajmohan announced in the Legislative Assembly that AI (Artificial Intelligence) education will be introduced in government schools starting from Class 6. He further stated that female students in government schools will be provided with T-shirts and track pants in addition to their regular uniforms. He also emphasized that daily physical education classes will be mandatory in government schools and that no other teachers are permitted to alter this schedule.